உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கு யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கு யாதவ்
Akku Yadav
Background information
இறப்புக் காரணம்:படுகொலை
Killings
பாதிக்கப்பட்டோர்:3
நாடு:இந்தியா

பரத் காளிசரண் என்னும் அக்கு யாதவ் ( Bharat Kalicharan, alias Akku Yadav (1972 - 13 ஆகத்து 2004),என்பவர் இந்தியாவைச் சேர்ந்த 32 வயது வன்புணர்ச்சியாளர் ஆவார்.[1][2][3]  இவரை 2004 ஆகத்து 13 வெள்ளிக்கிழமை அன்று கஸ்தூர்பா நகரைச் சேர்ந்த 200 பேர் கொண்ட பெண்கள் கூட்டத்தால் நாக்பூரில் அடித்துக் கொல்லப்பட்டார். யாதவின் முகத்தில் மிளகாய் தூள் மற்றும் கற்கள் கொண்டு தாக்கப்பட்டு, எழுபது முறைக்கு மேல் குத்தப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அவரது ஆண்குறியைத் தாக்கினார். இந்தத் தாக்குதல்கள் நாக்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலேயே நடந்தன,[4]  நீதிமன்ற அறையிலேயே கடுமையாக தாக்கப்பட்டார். யாதவ் பத்தாண்டு காலமாக உள்ளூர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவந்த போதும்,  உள்ளூர் காவல் துறையினர் யாதவிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றும், இதனால் யாதவ் தொடர்ந்து குற்றங்களை செய்து மக்களை முன்புறுத்திவந்தார் என தாக்குதலில் ஈடுபட்ட பெண்கள் குற்றம் சாட்டினர். யாதவ் குறைந்தது மூன்று பேரைக் கொன்று, அவர்களது உடல்களை இரயில் பாதையில் போட்டதாகவும் கூறப்படுகிறது.

2012 இல், அக்கு யாதவின் மருமகன் அமர் யாதவ் இதே போன்ற சூழ்நிலையில் குத்தப்பட்டதால் இறந்தார்.[5]

இந்தக் கொலையில் ஈடுபட்ட ஐந்து பெண்களை உடனே காவல்துறை கைது செய்து. நகரில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டதையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். உள்ளூர் சேரியில் வசிக்கின்ற ஒவ்வொரு பெண்ணும் இந்தக் கொலைக்கு பொறுப்பேற்றனர். உள்ளூர் செயற்பாட்டாளரான உஷா நாராயண் இந்தக் கொலை தொடர்பாக பிறருடன் சேர்த்து கைது செய்யப்பட்டார்.  2012இல் உஷா நாராயணன் வெளியே வந்தார்.[6] ஆறு பெண்கள் உட்பட கைது செய்யப்பட்ட பிறர்  வேறு நபர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Trial in Akku Yadav murder case begins". The Times of India. 23 October 2012. https://timesofindia.indiatimes.com/city/nagpur/Trial-in-Akku-Yadav-murder-case-begins/articleshow/16920887.cms. பார்த்த நாள்: 26 July 2018. 
  2. Prasad, Raekha (16 September 2005). "'Arrest us all': the 200 women who killed a rapist". The Guardian. https://www.theguardian.com/world/2005/sep/16/india.gender. பார்த்த நாள்: 26 July 2018. 
  3. Kristof, Nicholas D. (15 January 2006). "In India, One Woman's Stand Says 'Enough'". Archived from the original on 2010-02-09 – via NYTimes.com.
  4. http://www.humanrightsinitiative.org/publications/police/killing_justice_vigilantism_in_nagpur1.pdf
  5. "Teens stab to death Akku Yadav's nephew - Times of India".
  6. "Usha Narayane".
  7. "In Lynching of Alleged Rapist in Nagpur Court in 2004, All Accused Let Off".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கு_யாதவ்&oldid=3780516" இலிருந்து மீள்விக்கப்பட்டது