அக்குமினைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்குமினைட்டு
Acuminite
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுSrAlF4OH•(H2O)
இனங்காணல்
நிறம்வெண்மை
படிக இயல்புஇரட்டைக்கூர் கோபுர ஈட்டிமுனை வடிவ படிகக் தொகுதிகள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
இரட்டைப் படிகமுறல்{100} இல் தொடர்பு
பிளப்பு{001} இல் சரியான பிளவு
மோவின் அளவுகோல் வலிமை3.5
மிளிர்வுகண்ணாடி போல பளபளப்பானது
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி3.295
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.451 nβ = 1.453 nγ = 1.462 - 1.463
மேற்கோள்கள்[1][2][3]

அக்குமினைட்டு (Acuminite) என்பது SrAlF4(OH)•(H2O). என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதுவோர் அரிய ஆலைடு வகைக் கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. ஈட்டி முனை என்ற பொருள் கொண்ட இலத்தீன் சொல்லான அக்குமென் என்ற சொல்லில் இருந்து இக்கனிமத்தின் பெயர் வருவிக்கப்பட்டுள்ளது. மோவின் அளவுகோலில் இதன் கடினத்தன்மை 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிரீன்லாந்து நாட்டின் இவிட்டூட்டு நகரில் காணப்படும் கிரையோலைட்டு படிவுகளில் மட்டும் அக்குமினைட்டு கனிமம் அமைவிடமாகக் கொண்டுள்ளது [1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்குமினைட்டு&oldid=2590039" இருந்து மீள்விக்கப்பட்டது