உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கினிப் பிரவேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்னிபிரவேசத்தில் ஈடுபடும் சீதையின் முகலாயர் கால ஓவியம்.

அக்னிப்பிரவேசம் (சமக்கிருதம்: अग्निप्रवेशम),[1] அல்லது அக்னிப்பரிட்சை (சமக்கிருதம்: अग्निपरीक्षा) என்பது இந்து இலக்கியங்களில் கூறப்படும் தீக்குளிப்பு குறித்த சொல்லாகும்.[2] இது முதன்மையாக இராமாயணத்தில் சீதைக்கு இடப்பட்ட சோதனை குறித்தது கூறுப்படுகிறது. மேலும் இது வேத பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு பாரம்பரியமாகக் கருதப்படுகிறது.[3]

தொன்மக் கதை

[தொகு]

இராமாயணத்தின் கடைசிப் பகுதியில் இராவணனால் கடத்தப்பட்ட சீதையின் கற்பின் மீது எழுந்த ஐயத்தின் காரணமாக, சீதை தன் கணவன் இராமனுக்கும், அயோத்தி மக்களுக்கும் தன் கற்பை நிறுவ அக்கினிப்பிரவேசம் செய்கிறாள்.[4][5][6] தன் கற்பை நிரூபிக்க அவள் அக்னி தேவனை அழைக்கிறாள். தீயில் இறங்கியும் நெருப்பு அவளை ஒன்றும் செய்யாததே இராமனுக்கு அவள் கற்புடையவள் என்பதற்கு சாட்சியாகிறது.[7]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. www.wisdomlib.org (2017-08-29). "Agnipravesha, Agnipraveśa, Agni-pravesha: 11 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-05.
  2. Muralidharan, Kavitha. "With just 11 stories this collection goes to the core of Tamil writer Jayakanthan's fiction". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-09.
  3. Herman, Phyllis K.; Shimkhada, Deepak (2009). The Constant and Changing Faces of the Goddess: Goddess Traditions of Asia (in ஆங்கிலம்). Cambridge Scholars Publishing. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1443807029.
  4. Parimoo, Ratan (1986). Vaiṣṇavism in Indian Arts and Culture: Collected Papers of the University Grants Commission National Seminar on "Impact of Vaiṣṇavism on the Indian Arts" (in ஆங்கிலம்). Books & Books. p. 446. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8185016184.
  5. Patra, Dr Dipankar; Banerjee, Subhashis; Doley, Abani; Chatterjee, Biswarup; Karmakar, Sharmistha; Kamsi, Zenny (2021). Interface a National Research Anthology on Indigenous Language, Literature & Culture (in ஆங்கிலம்). Book Rivers. p. 300. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9391000219.
  6. Kishwar, Madhu Purnima (2008). Zealous Reformers, Deadly Laws (in ஆங்கிலம்). Sage Publications India. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8132100096.
  7. Naidu, Vayu (2012). Sita's Ascent (in ஆங்கிலம்). Penguin UK. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8184757712.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கினிப்_பிரவேசம்&oldid=4052521" இலிருந்து மீள்விக்கப்பட்டது