அக்கார அடிசில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்கார அடிசில் என்பது வைணவ ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் ஓர் உணவுப் பொருளாகும். குறிப்பாக இது மார்கழி மாதம் 27 ஆம் நாள் செய்யப்படும். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று பாவை நோன்பைத் துவங்குவோர் மிகையளவு நெய்யும் பாலும் கலந்து இப் பண்டத்தைச் செய்வர். பால், நெய், அரிசி, பயத்தம் பருப்பு வெல்லம், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் இவை கலந்து இது செய்யப்படுகிறது. சோறாக்கும் போது அரி‌சி நீரில் வேகவைக்கப்படும். இங்கோ அரிசி பாலில் வேகவைக்கப்படும். இது சர்க்கரைப் பொங்கல் ‌போல திடமாகவும் இராது. பாயசம் போல திரவமாகவும் இராது.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கார_அடிசில்&oldid=2266518" இருந்து மீள்விக்கப்பட்டது