உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கண்ணா மாதண்ணா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கண்ணா மாதண்ணா கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தெலங்காணா
அமைவு:ஷாலிபண்டா, ஐதராபாத்து
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:மாதண்ணா மற்றும் அக்கண்ணா

அக்கண்ணா மாதண்ணா கோயில் ( Akkanna Madanna Temple ) என்பது இந்தியாவின் தெலுங்காணா மாநிலத்தில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் . [1] ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் இரட்டை நகரங்களில் கொண்டாடப்படும் போனலு பண்டிகையின் போது இது பிரபலமானது. [2] போனாலு விழாவின் போது நடைபெறும் கத்தம் ஊர்வலத்திற்கு இக்கோயில் பெயர் பெற்றது.

வரலாறு

[தொகு]

17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஐதராபாத் நகரம் தானா ஷா என்ற அரசரால் ஆளப்பட்டது. அவர் கோல்கொண்டா கோட்டையில் பேரரசராக இருந்தார். அரச மன்னரின் அரசவையில் பல அமைச்சர்கள் இருந்தனர், அதில் மாதண்ணா மற்றும் அக்கண்ணா இருவரும் சகோதரர்கள் முறையே தளபதியாகவும் பிரதமராகவும் பணியாற்றினார்கள். இந்த இரண்டு சகோதரர்களும் மன்னரின் விருப்பமான மந்திரிகளில் ஒருவராக இருந்தனர். அவர்கள் இருவரும், காளி கோயிலுக்கு அருகில் இருந்த அரசரது சொந்த வீட்டில் தங்கினர். மகாகாளி தேவியின் உண்மையான சீடர்களான அக்கண்ணாவும், மாதண்ணாவும் தங்களுடைய அன்றாட வேலைக்காக கோல்கொண்டா நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்னர், கோவிலில் தினமும் பூஜை செய்தனர். இந்த இரண்டு சகோதரர்களும் கொல்லப்பட்ட உடனேயே, கோவில் மூடப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.

ஷாலிபண்டாவில் உள்ள ஹரி பவுலியின் சிதைவுகளிலிருந்து கோயில் புத்துயிர் பெற்று அறுபத்தேழு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. கோயில் புத்துயிர் பெறுவதற்கு முன்பு, பழைய நகரத்தில் மிகச் சிலரே இந்த கோயில் இருப்பதைப் பற்றி அறிந்திருந்தனர். அப்போதிருந்து, மகாகாளியின் கோவில் பழைய நகரமான ஐதராபாத்தில் புகழ் பெற்று விளங்குகிறது.

1998 தாக்குதல்கள்

[தொகு]

கடந்த 1998-ம் ஆண்டு சமூக விரோதிகள் கோவிலை தாக்கி சிலைகள் மற்றும் கோயில் உடமைகளை அழித்துள்ளனர். [3]

கட்டிடக்கலை

[தொகு]

இக்கோயில் இந்து சமய கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளது. கோவிலின் தூண்கள், சுவர்கள் மற்றும் கூரையில் தெய்வங்களின் கல்வெட்டுகள் மற்றும் அவை தொடர்பான கதைகள் உள்ளன. கோயில் வளாகத்தில் பல சிறிய கோயில்கள் உள்ளன. பிரதான கோபுரத்தில் காளி தேவியின் உருவங்கள் உள்ளன. [4]

மத முக்கியத்துவம்

[தொகு]

அக்கண்ணா மாதண்ணா கோவில் மிகவும் பிரபலமாக மஹாகாளியின் பக்தர்களிடையே அறியப்படுகிறது. இந்த கோவிலில், இந்து மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களின்படி ஏராளமான பூஜைகள், அர்ச்சனைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. வேதங்களில் பரிந்துரைக்கப்பட்ட பெரும்பாலான விதிகள் மற்றும் விதிமுறைகள் இந்த கோவிலில் பின்பற்றப்படுகின்றன. மஹாகாளியின் பக்தர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும், மஹாகாளியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும் தினமும் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர். [5]

அமைவிடம்

[தொகு]

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் உள்ள பழைய நகரமான ஷா-அலி-பண்டாவில் இந்த கோயில் அமைந்துள்ளது, இந்த கோயில் சார்மினாரிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. [6]

மேலும் பார்க்கவும்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. The Hindu : Telangana / Hyderabad News : Bonalu spirit envelops old city
  2. The Hindu : `Bonalu' festival concludes
  3. "The 1998 Attack on the". Archived from the original on 4 February 2016. பார்க்கப்பட்ட நாள் 17 September 2014.
  4. "Akkanna Madanna Temple Shalibanda Hyderabad Telangana History & Architecture". www.astrolika.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
  5. "Akkanna Madanna Temple Shalibanda Hyderabad Telangana History & Architecture". www.astrolika.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
  6. "Akkanna Madanna Mahankali Temple Timings, History | Hyderabad Telangana -". Temples In India Info (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-06-10. பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கண்ணா_மாதண்ணா_கோயில்&oldid=3635338" இலிருந்து மீள்விக்கப்பட்டது