உள்ளடக்கத்துக்குச் செல்

அகோலா தாலுகா

ஆள்கூறுகள்: 19°32′32.06″N 74°0′19.88″E / 19.5422389°N 74.0055222°E / 19.5422389; 74.0055222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகோலா தாலுகா
மகாராட்டிரா மாநிலத்தின் அகோலா மாவட்டத்தில் உள்ள அகோலா தாலுகாவின் அமைவிடம்
மகாராட்டிரா மாநிலத்தின் அகோலா மாவட்டத்தில் உள்ள அகோலா தாலுகாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°32′32.06″N 74°0′19.88″E / 19.5422389°N 74.0055222°E / 19.5422389; 74.0055222
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்அகோலா மாவட்டம்
தலைமையிடம்அகோலா
அரசு
 • மக்களவைத் தொகுதிஅகோலா மக்களவைத் தொகுதி
 • சட்டமன்றத் தொகுதிஅகோலா
பரப்பளவு
 • மொத்தம்1,505.08 km2 (581.11 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,91,950
 • அடர்த்தி190/km2 (500/sq mi)
Demographics
 • எழுத்தறிவு74.86%
 • பாலின விகிதம்1000:974
சராசரி மழைப்பொழிவு1058 mm
இணையதளம்www.akole.in

அகோலா தாலுகா (Akole taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த அமராவதி மண்டலத்தில் அமைந்த அகோலா மாவட்டத்தில் உள்ள 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இத்தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடம் அகோலா நகரம் ஆகும். இந்த தாலுகா அகோலா மாநகராட்சி, ராஜூர் கணக்கெடுப்பு ஊர் மற்றும் 190 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. [1]அகோலா நகரத்தில் அகோலா வானூர்தி நிலையம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 59,284 குடும்பங்களைக் கொண்ட அகோலா தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 2,91,950 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 147,880 மற்றும் 144,070 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 34,854 - 12% ஆகும். சராசரி எழுத்தறிவு 74.86% ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 13,323 மற்றும் 1,39,730 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 2,79,276 (95.66%), இசுலாமியர்கள் 6,970 (2.39%), பௌத்தர்கள் 4,593 (1.57%) மற்றும் பிறர் 0.37% ஆக உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோலா_தாலுகா&oldid=3338731" இலிருந்து மீள்விக்கப்பட்டது