அகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள அகோவின் சிலை

அகோ பகத் பொதுவாக அகோ என குறிப்பிடப்படுபவர் (Akha Bhagat, commonly known as Akho; c. 1615 – c. 1674) or Akha Rahiyadas Soni[1] ) என்பவர் பக்தி இயக்க பாரம்பரியத்தில் எழுதிய ஒரு குஜராத்தி கவிஞராவார். இவர் தனது கவிதைகளை சப்பே என்கிற இலக்கிய வடிவத்தில் எழுதினார்.

வாழ்க்கை[தொகு]

இவர் வழ்ந்த காலகட்டமானது துல்லியமாக அறியப்படவில்லை, என்றாலும் 1615 முதல் 1674 வரை அல்லது 1600 முதல் 1655 வரையான காலகட்டத்தில் இவர் வாழ்ந்தார் எனப்படுகிறது. இவர் அகோ என்னும் சாதியைச் சேர்ந்த ஒரு தட்டார் ஆவார். இவர் அகமதாபாதுக்குச் அண்மையில் உள்ள ஜேதல்புரத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து அகமதாபாத்திற்குக் குடியேறினார். நெருங்கிய உறவினரின் நடத்தையின் காரணமாக இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து உண்மையான ஒரு குருவைத் தேடிப் புறப்பட்டார். காசியில் இருவருக்குப் பிரம்மானந்தார் என்ற பெயருள்ள சற்குரு கிடைத்தார். அகோ தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராயினும் இவருடைய மனப்பான்னையைக் கண்டு மகிழ்ந்த குரு அவருக்குச் சத்திய ஞானத்தை உபதேசித்தார். அகோ அகே கீதா முதலிய வேதாந்தத்தைப்பற்றிய 10, 12, காவிய நூல்களும் சப்பே என்ற 6 அடிகள் கொண்ட சந்தப் பாக்கள் பலவும் இயறினர். இவர் 746 சப்பேகளை இயற்றியுள்ளார்.[2] இவர் குஜராத்தி இலக்கியத்திற்கு ஒரு புது வழியைக்காட்டியாக, ஒரு புது நடையையையும் கொடுத்திருக்கிறார். இவர் தத்துவ ஞானத்தை மக்களுக்குப் போதித்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kavi Akho Soni". Kavilok Gujarati Poetry Journal. http://www.kavilok.com/kavi_poet_akho.html. பார்த்த நாள்: 10 August 2017. 
  2. Behramji Malabari (1882). Gujarat and the Gujaratis: Pictures of Men and Manners Taken from Life. Asian Educational Services. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-0651-7. https://books.google.com/books?id=Lyd8jPbN218C. 
  3. "அகோ". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 23. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோ&oldid=3073402" இருந்து மீள்விக்கப்பட்டது