அகில இலங்கை இந்து மாமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகில இலங்கை இந்து மாமன்றம் (All Ceylon Hindu Federation (ACHF), இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில் 6 பிப்ரவரி 1955 முதல் செயல்படுகிறது. இவ்வமைப்பின் தலைவராக கந்தையா நீலகண்டன் உள்ளார். சில விடயங்களில், அகில இலங்கை இந்து மாமன்றம், பௌத்தர்களின் இயக்கமான பொது பல சேனாவுடன் இணைந்து செயல்படுகிறது. [1][2]

இலக்குகள்[தொகு]

  • இந்து சமய வேதங்களை பயிற்றுவித்தல் மற்றும் சமயச் சடங்களைக் கற்றுத் தருதல்.
  • மக்களிடையே இந்துப் பண்பாடு மற்றும் சமயக் கல்வியை ஊக்குவித்தல்.
  • இந்து சமய நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த பழமையான இடங்களைப் பாதுகாத்தல் மற்றும் மீளமைத்தல்.
  • இந்து அமைப்புகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதலை ஊக்குவித்தல்.
  • இந்து மெய்யியல் கல்லூரிகளை நிறுவி, அவற்றின் மூலம் இந்து சாத்திரங்கள், தருமம், தத்துவங்களை கற்பித்தல். மேலும் சமய சாத்திரங்களின்படி கோயில் பூஜைகள், குடமுழுக்கு, கோயில் திருவிழாக்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை கற்றுத்தருதல்.
  • அவ்வப்போது இந்து சமுதாயத்தின் நலனைப் பாதுகாக்க அறிவுறுத்தல் வழங்குவது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BBS ties up with Hindu Federation for reconciliation
  2. "HINDUS NEED NOT JOIN BODU BALA SENA TO PROTECT HINDUISM – ACHC". Archived from the original on 2019-07-15. பார்க்கப்பட்ட நாள் 2019-06-12.

வெளி இணைப்புகள்[தொகு]