உள்ளடக்கத்துக்குச் செல்

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், மங்களகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், மங்களகிரி
Other nameகள்
AIIMSMNG
குறிக்கோளுரைசகல் சுவஸ்திய சர்வதா
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2018
தலைவர்இந்திய இராணுவப் பதவிகளும், பதவிச் சின்னங்களும் (மருத்துவர்) தபன் குமார் சாகா
பணிப்பாளர்மருத்துவர் அகந்தம் சாண்டா சிங்[1]
கல்வி பணியாளர்
80
நிருவாகப் பணியாளர்
120
மாணவர்கள்280+
அமைவிடம்
மங்களகிரி, அமராவதி (நகரம்)
, ,
இந்தியா

16°26′N 80°33′E / 16.43°N 80.55°E / 16.43; 80.55
வளாகம்நகர்ப்புற வளாகம்
சேர்ப்புசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)
இணையதளம்www.aiimsmangalagiri.edu.in

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், மங்களகிரி (AIIMS Mangalagiri) என்பது ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் மங்களகிரியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பெற்ற பொது மருத்துவப் பல்கலைக்கழகம், மருத்துவமனையாகும். இது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா) கீழ் செயல்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களுள் ஒன்றாகும். 2018ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது.

தரவரிசை

[தொகு]

2025 ஆம் ஆண்டு பன்னாட்டு நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு தரவரிசையின்படி, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், மங்களகிரி, இந்தியாவின் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் 29-ஆவது இடத்தையும், தென் மண்டலத்தில் 8-ஆவது இடத்தையும், ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.[2]

வரலாறு

[தொகு]

2014–15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 2014 சூலை மாதத்தில் சமர்ப்பித்தபோது, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராட்டிரம் மாநிலத்தின் விதர்பா பகுதி மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் நான்கு புதிய “நிலை-நான்கு” அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களை அமைப்பதற்காக ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.[3][4]

ஆந்திரப் பிரதேசத்தின் மங்களகிரியில் அமைக்கப்படவிருந்த எய்ம்சு நிறுவனத்திற்கு 2015 அக்டோபரில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்காக சுமார் ₹1,618 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. நிரந்தர வளாகத்தின் கட்டுமானப் பணிகள் 2017 செப்டம்பரில் தொடங்கப்பட்டன. அதன் அடிக்கல்லை மத்திய சுகாதார அமைச்சர் ஜே. பி. நட்டா, இந்திய துணைக் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு மற்றும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கல்வி

[தொகு]

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், மங்களகிரி தனது 2018–19 கல்வியாண்டை சித்தார்த்த மருத்துவக் கல்லூரியின் தற்காலிக வளாகத்தில் 50 மாணவர்களுடன் தொடங்கியது. 2019–20 கல்வியாண்டில் மேலும் 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நிரந்தர வளாகத்தில் சேர்ந்த முதல் மாணவர் தொகுதி 2020–21 கல்வியாண்டைச் சேர்ந்த 125 மாணவர்களாகும்.[5]

நிரந்தர வளாகத்தின் வெளிநோயாளர் பிரிவு 2019 மார்ச் மாதத்தில் செயல்படத் தொடங்கியது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Appointment of Director, AIIMS cleared". indianmandarins.com. 5 October 2018 இம் மூலத்தில் இருந்து 12 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181112021517/https://indianmandarins.com/blog-details?i=16902&appointment-of-director,-aiims-cleared. பார்த்த நாள்: 11 November 2018.
  2. www.iirfranking.com. "IIRF Ranking: Universities, Engineering, B-Schools, (10+2) Schools, Design, Architecture & Law". IIRFRanking (in ஆங்கிலம்). Retrieved 2025-08-18.
  3. "5 more IIMs, IITs and four more AIIMS to be set up" (in en). Hindustan Times. 10 July 2014. http://www.hindustantimes.com/india/5-more-iims-iits-and-four-more-aiims-to-be-set-up/story-2g4Q7A2NottKsqQs3Kn0oK.html. பார்த்த நாள்: 4 August 2017.
  4. "Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY)". Ministry of Health and Family Welfare. Archived from the original on 29 August 2017. Retrieved 11 November 2018.
  5. "AIIMS begins its journey with induction of 50 students" (in en-IN). The Hindu. 31 August 2018. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/aiims-mangalagiri-begins-its-journey-with-induction-of-1st-batch-of-50-students/article24824061.ece. பார்த்த நாள்: 31 August 2018.
  6. "OPD services at AIIMS, Mangalagiri from today" (in en-IN). New Indian Express. 12 March 2019. https://www.newindianexpress.com/cities/vijayawada/2019/mar/12/opd-services-at-aiims-mangalagiri-from-today-1949908.html. பார்த்த நாள்: 12 January 2020.

வெளியிணைப்புகள்

[தொகு]