அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ் अखिलेश यादव | |
|---|---|
அகிலேஷ் யாதவ் | |
| சமாஜ்வாதி கட்சியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 01 சனவரி 2017 | |
| முன்னையவர் | முலாயம் சிங் யாதவ் |
| 21ஆவது உத்தரப் பிரதேச முதலமைச்சர் | |
| பதவியில் 15 மார்ச் 2012 – 19 மார்ச் 2017 | |
| முன்னையவர் | மாயாவதி |
| பின்னவர் | யோகி ஆதித்தியநாத் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 சூலை 1973 சைஃபை, எடவா, உத்தரப் பிரதேசம் |
| அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| துணைவர் | டிம்பிள் யாதவ் |
| பிள்ளைகள் | அதிதி யாதவ், டீனா யாதவ், அருச்சுன் யாதவ் |
| வாழிடம் | சைஃபை, எடவா, உத்தரப் பிரதேசம் |
| முன்னாள் மாணவர் | மைசூர்ப் பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகம் |
| சமயம் | இந்து |
| இணையத்தளம் | www.akhileshyadav.com |
அகிலேஷ் யாதவ் (Akhilesh Yadav, இந்தி: अखिलेश यादव) (பிறப்பு 1 சூலை 1973), ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்திரப் பிரதேசத்தின் கர்ஹாலின் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகனுமாவார்.
2000ஆம் ஆண்டில் முதன்முறையாக கனுஜ் மக்களவைத்தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியில் மீண்டும் 2004ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[1].
2012ஆம் ஆண்டில் நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சிப் பரப்புரைகளில் முன்னணியில் இருந்து தனது கட்சி ஆட்சியைப் பற்றிட துணை புரிந்துள்ளார்.[2].
மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளநிலைப் பட்டத்தையும் சூழலியல் பொறியியலில் சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து முதுநிலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.[3][4]
2012 உ. பி. சட்டப்பேரவை தேர்தல்கள்
[தொகு]2012ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத் தேர்தல்களில் இவரது பரப்புரை தனித்தன்மையுடையதாக இருந்தது. ஈராழி மிதிவண்டியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் தனது குழுவில் தகவல்தொடர்பு தொழில்முறை வல்லுனரையும் வானொலித் தொகுப்பாளரையும் கொண்டிருந்ததும் இவரது ஆளுமையும் சமாஜ்வாதி கட்சி சட்டப்பேரவையின் 403 இடங்களில் 224 இடங்களைப் பிடிக்கக் காரணமாக அமைந்தது. தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கக் காரணமாக அமைந்ததால் அகிலேஷ் தனது 38ஆவது அகவையில் உத்தரப் பிரதேசத்தின் மிக இளமையான முதலமைச்சராக பொறுப்பேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]
வகித்தப் பதவிகள்
[தொகு]அகிலேசு யாதவ் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினராக ஒரு முறையும் இந்திய மக்களவை உறுப்பினராக ஐந்து முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[6]
| # | முதல் | வரை | பதவி | கட்சி |
|---|---|---|---|---|
| 1. | 2000 | 2004 | பதின்மூன்றாவது மக்களவை உறுப்பினர்-கன்னோஜ் மக்களவைத் தொகுதி (இடைத்தேர்தல்) | சமாஜ்வாதி கட்சி |
| 2. | 2004 | 2009 | பதினான்காவது மக்களவை உறுப்பினர்-கன்னோஜ் மக்களவைத் தொகுதி | சமாஜ்வாதி கட்சி |
| 3. | 2009 | 2012 | பதினைந்தாவது மக்களவை உறுப்பினர்- கன்னோஜ் மக்களவைத் தொகுதி (பதவி விலகல் 2012-ல்) & பிரோசாபாத் மக்களவைத் தொகுதி (பதவி விலகல் 2009-ல்) | சமாஜ்வாதி கட்சி |
| 4. | 2012 | 2018 | மாநிலச் சட்டமன்ற மேலவை (முதல் முறை); உத்தரப்பிரதேசம், முதலமைச்சர் - உத்தரப் பிரதேச அரசு (2012–2017) |
சமாஜ்வாதி கட்சி |
| 5. | 2019 | 2022 | இந்திய மக்களவை உறுப்பினர் (4வது முறை)-17வது மக்களவை - ஆசம்கர் மக்களவைத் தொகுதி (பதவி விலகல் 2022-ல்) | சமாஜ்வாதி கட்சி |
| 6. | 2022 | 12 சூன் 2024[7] | சட்டமன்ற உறுப்பினர் (முதல் முறை)-கர்கால் சட்டமன்றத் தொகுதி- உத்தரப் பிரதேச சட்டப் பேரவை |
சமாஜ்வாதி கட்சி |
| 7. | 2024[8] | 18வது மக்களவை உறுப்பினர் (5ஆவது முறை)-கன்னோஜ் மக்களவைத் தொகுதி | சமாஜ்வாதி கட்சி |
நீக்கம்
[தொகு]இவரை 2016 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29ஆம் திகதி சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் இவரின் அப்பாவுமான முலாயம் சிங் யாதவ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கினார்.[9] இதன் எதிரொலியாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் பதவியை தானே எடுத்துக்கொண்டதாக மாநாடு நடத்தி அறிவித்து, முலாயம் சிங் இனிமேல் கட்சி ஆலோசகராக இருப்பர் என்று தெரிவித்தார்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://india.gov.in/govt/loksabhampdetail.php?mpcode=564
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-08. Retrieved 2012-03-07.
- ↑ "ஸ்ரீ அகிலேஷ் யாதவ்: அறிமுகம்". இந்திய அரசு. Archived from the original on 2012-03-10. Retrieved 7 மார்ச் 2010.
- ↑ [1]
- ↑ http://business-standard.com/india/news/akhilesh-yadav-is-next-cmuttar-pradesh/160005/on
- ↑ "Member Profile". மக்களவை. Retrieved 30 September 2022.
- ↑ Kumar, Mayank (12 June 2024). "Akhilesh Yadav resigns as MLA from U.P. Assembly, will represent Kannauj in மக்களவை". The Hindu இம் மூலத்தில் இருந்து 13 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240613050337/https://www.thehindu.com/news/national/akhilesh-yadav-resigns-as-mla-from-up-assembly-will-represent-kannauj-in-lok-sabha/article68282080.ece.
- ↑ "Bullish Wins & Bearish Losses: Here are the key contests and results of 2024 மக்களவை polls". Economic Times. 6 June 2024 இம் மூலத்தில் இருந்து 27 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240727153249/https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/india/bullish-wins-bearish-losses-here-are-the-key-contests-of-2024-lok-sabha-results/articleshow/110713130.cms.
- ↑ [2]
- ↑ சிவபால் யாதவ் பதவி பறிப்பு: சமாஜ்வாதி தலைவராக அகிலேஷ் தேர்வு- தேர்தல் ஆணையத்துக்கு முலாயம் அவசர கடிதம் 2016 2 ஜனவரி தி இந்து தமிழ்