அகிலன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகிலன்
பிறப்பு5 செப்டம்பர் 1995 (1995-09-05) (அகவை 26)
சென்னை, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிமாதிரி நடிகர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2015-தற்போது வரை

அகிலன் (5 செப்டம்பர் 1995) என்பவர் தமிழ்நாட்டு மாதிரி நடிகர், குறும்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அகிலன் 1995 செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் திமுகவில் அரசியல்வாதியாக இருக்கும் புஷ்பராஜுக்கு மகனாக பிறந்தார். சென்னையின் செயின்ட் மேரி பாய்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். சென்னை எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், பின்னர் அகிலன் சென்னையில் உள்ள கூத்து பட்டாராய் என்ற நடிப்புப் பள்ளியில் நடிப்பு கலை பற்றி படித்தார்.

நடிப்புத்துத்துறை[தொகு]

2015 இல் ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்த திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இறைவி (திரைப்படம்) (2016), பியார் பிரேமா காதல் (2018) போன்ற திரைபபடங்களில் நடித்துள்ளார். சென்னையில் ஒரு மழைக்காலம், அடி பெண்ணே போன்ற சில குறும் படங்களிலும் நடித்துள்ளார்.

2019இல் விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் அகிலன் என்ற கதாபாத்திரத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கின்றார்.

தொடர்கள்[தொகு]

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2019-–ஒளிபரப்பில் பாரதி கண்ணம்மா அகிலன் விஜய் தொலைக்காட்சி
2019 ஸ்டார்ட் மியூசிக் விருந்தினராக
எங்கிட்ட மோதாதே 2 விருந்தினராக
2020 பாரதி கண்ணம்மா & பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் அகிலன்

திரைப்படம்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
2015 திரிஷா இல்லனா நயன்தாரா
2016 இறைவி
சென்னையில் ஒரு மழைக்காலம் குறும்படம்
உனக்கென நான்
2017 அடி பெண்ணே
2018 பியார் பிரேமா காதல்
2019 கேரமல் கண்ணலே குறும்படம்
ரா
கதிரும் நிலவும்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிலன்_(நடிகர்)&oldid=3146367" இருந்து மீள்விக்கப்பட்டது