உள்ளடக்கத்துக்குச் செல்

அகிரா மியாவாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகிரா மியாவாக்கி
宮脇 昭
அகிரா மியாவாக்கி, 2019-இல்
தாய்மொழியில் பெயர்宮脇 昭
பிறப்பு29 சனவரி 1928 (1928-01-29) (அகவை 98)
இறப்பு16 சூலை 2021(2021-07-16) (அகவை 93)
தேசியம்சப்பானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்இரோசிமா பல்கலைக்கழகம்
பணிதாவரவியலாளர்
விருதுகள்அசாகி பரிசு (1990)
நீலக் கோள் பரிசு (Blue Planet Prize) (2006)

அகிரா மியாவாக்கி (Akira Miyawaki) (29 சனவரி 1928 – 16 சூலை 2021[1]) ஒரு சப்பானிய தாவரவியலாளர் ஆவார். இவர் தாவரச் சூழியலிலும் புலமை பெற்றவர். இவரது இயற்கையாகக் காடு வளர்க்கும் முறையானது மியாவாக்கி முறை என்று உலகெங்கும் புகழ்பெற்று பல நாடுகளிலும் காடு வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது. இவர் வளம் குன்றிய நிலப்பகுதிகளில் இயற்கையாகக் காடு வளர்த்தலில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். 1993 ஆம் ஆண்டு முதல் யோக்கோகாமா தேசியப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசியராகப் பணிபுரிந்தார்.[2]

உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பங்களிக்கும் அறிவியல் ஆராய்ச்சி அல்லது அறிவியலின் பயன்பாடுகளில் சிறந்த முயற்சிகளை ஊக்குவிக்கும் நீல கிரகப் பரிசு 2006 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.[3][4]

சீனப் பெருஞ்சுவரை ஒட்டி உருவாக்கப்பட்ட காடுகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 熱帯林再生など指導 宮脇昭さん死去 93歳 横浜国立大名誉教授 பரணிடப்பட்டது 2 ஆகத்து 2021 at the வந்தவழி இயந்திரம் (in சப்பானியம்)
  2. "2006 Blue Planet Prize" (PDF). Blue Planet Prize. Archived (PDF) from the original on 25 September 2020. Retrieved 1 December 2020.
  3. Ghosh, Nirmal (21 August 2008). "The tree guru". ST Blogs. Singapore Press Holdings Ltd. Co. Archived from the original on 16 March 2012. Retrieved 3 January 2014.
  4. "Blue Planet Prize". Japan: The Asahi Glass Foundation. 2013. Archived from the original on 25 December 2016. Retrieved 3 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிரா_மியாவாக்கி&oldid=4200856" இலிருந்து மீள்விக்கப்பட்டது