உள்ளடக்கத்துக்குச் செல்

அகிரன்

ஆள்கூறுகள்: 25°21′10″N 82°55′58″E / 25.352719°N 82.932677°E / 25.352719; 82.932677
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகிரன்
Ahiran
கிராமம்
அகிரன் Ahiran is located in Varanasi district
அகிரன் Ahiran
அகிரன்
Ahiran
அகிரன் Ahiran is located in உத்தரப் பிரதேசம்
அகிரன் Ahiran
அகிரன்
Ahiran
அகிரன்
Ahiran (உத்தரப் பிரதேசம்)
அகிரன் Ahiran is located in இந்தியா
அகிரன் Ahiran
அகிரன்
Ahiran
அகிரன்
Ahiran (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°21′10″N 82°55′58″E / 25.352719°N 82.932677°E / 25.352719; 82.932677
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
ஏற்றம்
78.662 m (258.077 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,115
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
221204
எசு.டி.டி+91-5450
வாகனப் பதிவுஉபி65 XXXX
கிராமக் குறியீடு208848
இணையதளம்up.gov.in

அகிரன் (Ahiran) என்பது இந்தியாவிலுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி மாவட்டத்திலுள்ள பிந்த்ரா தாலுகாவில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். அகிரான் கிராமம் நாதையா பூர் கிராம பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. வாரணாசி நகரத்திற்கு வடமேற்கில் 10.6 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகர் இலக்னோவிலிருந்து சுமார் 282 கிலோமீட்டர் தென்கிழக்கிலும், தேசியத் தலைநகர் தில்லியிலிருந்து 805 கிலோமீட்டர் தொலைவிலும் அகிரன் கிராமம் உள்ளது.[1][2][3][4][5][6]

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அகிரன் கிராமத்தில் 293 குடும்பங்களில் மொத்தம் 2115 பேர் வசித்தனர். பாலின விகிதம் 852 ஆகவும், குழந்தை பாலின விகிதம் 775 ஆகவும் இருந்தது. இந்த இரண்டு விகிதங்களின் உத்தரபிரதேச மாநில சராசரி முறையே 912 மற்றும் 902 ஆகும்.[note]}}.[3]

விவரம் ஆண் பெண் மொத்தம் குறிப்பு
வீடுகள் - - 293 (2011)[3]
பெரியவர் 942 818 1,760
சிறியவர் (0–6 ஆண்டுகள்) 200 155 355
மொத்தம் 1142 973 2115
கல்வியறிவு 74.10% 49.76% 62.78%

போக்குவரத்து

[தொகு]

அகிரன் கிராமத்தை சாலை வழியாக அணுகலாம். இங்கு தொடருந்து நிலையம் இல்லை. இந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள இரயில் நிலையம் சிவ்பூர் தொடருந்து நிலையமாகும். இது வடகிழக்கில் 2.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாரணாசி விமான நிலையமும், இதைவிட அதிகமாக 143 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலகாபாத் விமான நிலையமும் அருகிலுள்ள செயல்பாட்டு விமான நிலையங்களாகும்.[7][8]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிரன்&oldid=4401226" இலிருந்து மீள்விக்கப்பட்டது