அகாமனிசிய பாரசீக சிங்க ரைடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகாமனிசிய பாரசீக  சிங்க ரைடன் (பாரசீகத்தில்: "تکوک شیر غران") என்பது அகாமனிசியக் காலத்திய பண்டைய கலைப் பொருள் ஆகும்.

பாரசீக - அகேமேனியக் கோப்பை

ரைடன் என்பது பானங்களை அருந்த பயன்படுத்தப்படும் ஒரு வகை கோப்பையாகும். இது விலங்குகளின் முக வடிவத்தைக் கொண்ட கூம்பு வடிவ கொள்கலனாக இருந்தது. இவை பண்டைய மத்தியக் கிழக்கு ஆசியவிலும், கிரேக்கத்திலும் பயன்பாட்டில் இருந்துள்ளன. [1]

பண்டைய பாரசீகர்கள் (ஈரானியர்கள்) பயன்படுத்திய பாத்திரத்தின் அடியில் விலங்கின் முகத்தைக் கொண்டதாக இதை அமைத்தனர்; பிற்காலத்தில் கிமு 550-இல் அதாவது அகாமனிசியப் பேரரசினர் காலத்தில், பொதுவாக விலங்கின் முகமானது ரைடனின் முன்புறத்தில் அமைந்திருப்பதாக, பாத்திரத்திற்கு 90 பாகை கோணத்தில் செங்குத்தாக வடிவமைக்கப்பட்டது.

இந்த ரைடனானது கி.மு. 500 இல் உருவாக்கப்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் உயரமானது 6.7 அங்குலம் (17 செ.மீ ) கொண்டதாக, முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இதன் பல்வேறு பாகங்கள் தனித்தனியாகச் செய்யப்பட்டு ஒன்றாக பற்றவைக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதெல்லாம் வெளியே தெரியாத அளவுக்கு செய் நேர்த்தியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரைடனில் ஊற்றப்பட்ட பானத்தை ஒரு மிடரு அருந்தினால்கூட மிகப்பெரிய ஆற்றல் கிடைக்கும் என்று அக்காலத்திய மக்கள் நம்பினர்.

இந்த சிங்கத் தலைப் பாத்திரமானது 1954 ஆம் ஆண்டு பாரசீகத்தின் தென்மேற்குப் பகுதியான ஈலாம் எனுமிடத்தில், பிளெட்சர் ஃபண்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த ரைடனானது நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது . [2]

குறிப்புகள்[தொகு]

  1. "The Persians: Archaeology of Achaemenid Persia". Wfltd.com. மூல முகவரியிலிருந்து 2015-07-07 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015-07-28.
  2. "Vessel terminating in the forepart of a lion [Iran]" (54.3.3) In Heilbrunn Timeline of Art History . New York: The Metropolitan Museum of Art, 2000–. http://www.metmuseum.org/toah/works-of-art/54.3.3. (October 2006)