அகான்தசுத் தாவரப்பேரினம்
அகான்தசு | |
---|---|
![]() | |
Acanthus montanus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் Angiosperms |
தரப்படுத்தப்படாத: | Eudicots |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | முண்மூலிகைக் குடும்பம் |
துணைக்குடும்பம்: | Acanthoideae |
சிற்றினம்: | Acantheae |
பேரினம்: | அகான்தசு Acanthus L. |
இனங்கள் | |
உரையைக் காண்க | |
வேறு பெயர்கள் | |
Cheilopsis Alfred Moquin-Tandon[1] |
அகான்தசு தாவரப்பேரினம் (ஆங்கிலம்:Bear's breeches, தாவரவியல் வகைப்பாடு : Acanthus) என்பது பூக்கும் தாவரம் என்ற உயிரியக் கிளையின் கீழ் அமைந்துள்ள, முண்மூலிகைக் குடும்பத்தின் ~250 பேரினங்களில் உள்ள ஒரு முக்கியமானப் பேரினம் ஆகும். இதிலுள்ள பெரும்பான்மையானத் தாவர இனங்கள் மூலிகைகளாக அமைந்து, உலகின் பல நாட்டினரால் பயன் படுத்தப் படுகிறது. இப்பேரினத்தின் கீழ் ஏறத்தாழ 30 இனங்கள் உள்ளன. வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ஆசியா வரை இவை காணப்படுகின்றன. இதன் தாவரங்கள், பல்வகைமைகளுடையத்(diversity) தாவரங்களாக அமைந்துள்ளன. கிரேக்கச் சொல்லான ἄκανθος, akanthos என்பது முள், பூ என்பதைக் குறிக்கிறது. மேலும், இத்தாவரங்களின் வடிவம், கொறிந்திய ஒழுங்கு [2][3] என்ற பழங்கட்டிடக்கலையை ஒத்து இருப்பதாலும், இப்பெயரைப் பெற்றது. இவை பல்லாண்டு வாழ்கின்ற இயல்புடையதாகவும், (perennial), அரிதான முட்புதர்செடியாகவும்(subshrub) விளங்குகின்றன. இதன் இலைகளில் முட்களும், முட்மஞ்சரியாகவும் (raceme) இருக்கின்றன. பூக்கள் வெள்ளை நிறத்துடன் அல்லது வெளிர் சிவப்புடனும் இருக்கின்றன. அவற்றின் உயர அளவு 0.4 முதல் 2 m (1.3 முதல் 6.6 ft) என வேறுபட்டு காணப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Acanthus L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-01-23. 2010-06-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ἄκανθος. Liddell, Henry George; Scott, Robert; A Greek–English Lexicon at the Perseus Project. Harper, Douglas. "acanthus". Online Etymology Dictionary.
- ↑ Quattrocchi, Umberto (2000). CRC World Dictionary of Plant Names: A-C. CRC Press. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-2675-2. https://books.google.com/books?id=esMPU5DHEGgC&.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
- மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்