அகாந்தோசெரகசு சயனோசெபாலசு
தோற்றம்
| அகாந்தோசெரகசு சயனோசெபாலசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | அகாந்தோசெரகசு |
| இனம்: | அ. சயனோசெபாலசு |
| இருசொற் பெயரீடு | |
| அகாந்தோசெரகசு சயனோசெபாலசு (பால்க், 1925) | |
அகாந்தோசெரகசு சயனோசெபாலசு (Acanthocercus cyanocephalus), பொதுவாக பால்கி நீலத் தலை மர அகமா என்று அழைக்கப்படுகிறது. இது அகமிடே குடும்பத்தில் உள்ள பல்லி சிற்றினம் ஆகும். அங்கோலா, நமீபியா, சாம்பியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆகிய நாடுகளில் இது காணப்படுகிறது. அ. சயனோசெபாலசு அதிகபட்சமாக 350 மில்லிமீட்டர்கள் வரை வளரக்கூடியது. இது மர அகமா பேரினத்தில் பெரியது. இருப்பினும், இதன் உடல் அளவுடன் ஒப்பிடும் போது இதன் வால் சிறியது. ஆண் பல்லி, நீல நிறத் தலைகள், புள்ளிகள் கொண்ட உடல், பல வடிவங்கள் கொண்ட வால் மூலம் மற்ற அனைத்து உயிரினங்களிலிருந்தும் தெளிவாக வேறுபடுகின்றன. நீல தலை மர அகமாக்கள் சிலந்திகள், கம்பளிப்பூச்சிகள், எறும்புகள், கரையான்கள் உள்ளிட்ட கணுக்காலிகளை உண்பதாக அறியப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Baptista, N.; Bauer, A.M.; Becker, F.; Conradie, W. (2020). "Acanthocercus cyanocephalus". IUCN Red List of Threatened Species 2020: e.T136544007A136544025. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T136544007A136544025.en. https://www.iucnredlist.org/species/136544007/136544025. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Acanthocercus cyanocephalus at the Reptarium.cz Reptile Database. Accessed 20 October 2020.