அகாந்தோசெரகசு அட்ரிகோலிசு
| அகாந்தோசெரகசு அட்ரிகோலிசு | |
|---|---|
| குருகர் தேசிய பூங்காவில் அ. அட்ரிகோலிசு (தென்னாப்பிரிக்கா) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | அகாந்தோசெரகசு
|
| இனம்: | அ. அட்ரிகோலிசு
|
| இருசொற் பெயரீடு | |
| அகாந்தோசெரகசு அட்ரிகோலிசு (சுமித், 1849) | |
| வேறு பெயர்கள் | |
| |
அகாந்தோசெரகசு அட்ரிகோலிசு (Acanthocercus atricollis) என்பது கருப்பு கழுத்து அகமா அல்லது தெற்கு மர அகமா என அழைக்கப்படுகிறது.[1] இது கிழக்கு, மத்திய, தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மர அகாமாவின் ஒரு சிற்றினமாகும். இதன் மிகப்பெரிய தொடர்ச்சியான வரம்பு தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. மேலும் இது குரூகர் தேசிய பூங்காவில் அதிக அளவில் காணப்படுகிறது.[1]
விளக்கம்
[தொகு]
அ. அட்ரிகோலிசு பாலினங்கள் ஒப்பிடக்கூடிய மூக்கு-குத நீளம் கொண்டவை. ஒத்த வால் நீளம் கொண்டவை. முதிர்ந்த ஆண் பெண் ஓந்தியினை விட சற்றே பெரிய தலையுடன் காணப்படும். இது பிராந்தியத்திற்கான போட்டிக்கான தழுவலாக கருதப்படுகிறது. பெண் ஓந்தி சுமார் 96 மிமீ (3.8 அங்குலம்) நீளமும் ஆண் ஓந்தி சுமார் 82 மிமீ (3.2 அங்குலம்) நீளம் பாலியல் முதிர்ச்சி அடையும் போது காணப்படும்.[2]
உணவு
[தொகு]இவை பூச்சியினை உண்டு வாழ்கின்றன. இவற்றின் உணவில் முக்கியமாக ஆர்த்தோப்டிரான்கள், வண்டுகள், எறும்புகள் உள்ளன. இரையின் பன்முகத்தன்மை பருவகாலத்தினைப் பொறுத்து வேறுபடும்.[1][3]
துணையினங்கள்
[தொகு]இரண்டு துணையினங்கள் அ. அட்ரிகோசிசு சிற்றினத்தின் கீழ் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நான்கு துணையினங்கள் விவரிக்கப்பட்ட போதிலும் இவை மிகவும் வேறுபட்டவை அல்ல.[1][3]
- அ. அ. அட்ரிகோலிசு (சுமித், 1849) - தென்னாப்பிரிக்காவின் தெற்கு மர அகமா
- அ. அ. லவ்ரிட்ஜ்ஜி (கிளாசுவிட்சு, 1957) - தான்சானியா
படங்கள்
[தொகு]-
பரிந்துரைக்கப்பட்ட, அ. அ. கிவூவென்சிசு (குளுசெவிட்சு, 1957) கிவு ஏரியில்
-
உருமைத்தோற்றத்தில் பெண்
-
கலவியில் இணை
-
இளம் உயிரி
பொதுவகத்தில் அகாந்தோசெரகசு அட்ரிகோலிசு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Spawls, S. (2020). "Acanthocercus atricollis". IUCN Red List of Threatened Species 2020: e.T110132395A20519412. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T110132395A20519412.en. https://www.iucnredlist.org/species/110132395/20519412. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Reaney, Leeann T.; Whiting, Martin J. (August 2002). "Life on a limb: ecology of the tree agama (Acanthocercus a. atricollis) in southern Africa". Journal of Zoology 257 (4): 439–448. doi:10.1017/S0952836902001048.
- ↑ 3.0 3.1 Uetz, Peter; Hallermann, Jakob. "Acanthocercus atricollis (SMITH, 1849)". The Reptile Database. Retrieved 22 July 2015.
