அகாந்தோசெரகசு அட்ராமிடேனசு
| அகாந்தோசெரகசு அட்ராமிடேனசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | அகாந்தோசெரகசு |
| இனம்: | அ. அட்ராமிடேனசு |
| இருசொற் பெயரீடு | |
| அகாந்தோசெரகசு அட்ராமிடேனசு (ஆண்டர்சன், 1896) | |
அகாந்தோசெரகசு அட்ராமிடேனசு (Acanthocercus adramitanus), பொதுவாக ஆண்டர்சன் பாறை அகமா அல்லது காட்ராமாட் அகமா என்றும் அழைக்கப்படுகிறது. இது அகாமிடே குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய வகை பல்லி சிற்றினம் ஆகும். இந்தச் சிற்றினம் அறபுத் தீபகற்பத்தில் காணப்படும் அகணிய உயிரி.
புவியியல் வரம்பு
[தொகு]அ. அட்ராமிடேனசு என்பது ஓமான், சவூதி அரேபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது.[2]
வாழிடம்
[தொகு]அ. அட்ராமிடேனசு இயற்கையான வாழ்விடம் கடல் மட்டத்திலிருந்து 2,000 m (6,600 அடி) உயரத்தில் உள்ள பாறைப் பகுதிகளிலும் அதற்கும் குறைவான இடங்களிலும் காணப்படுகிறது.[1]
விளக்கம்
[தொகு]அ. அட்ராமிடேனசு மூக்கிலிருந்து குதம் வரை 15 cm (5.9 அங்) நீளமுடையதாக இருக்கலாம். இதன் வால் நீளமானது, உடல் நீளத்தினை விட இரண்டு மடங்கு அதிகம். பெண் ஓந்தி ஆண்களை விட சற்று சிறியவை. பெண் நீல நிறமாகவும், ஆண் விலங்குகள் அடர் நீல நிறமாகவும் இருக்கும்.[3]
உணவு
[தொகு]அ. அட்ராமிடேனசு பூச்சிகளை வேட்டையாடி உணவாக உட்கொள்கிறது.[1]
இனப்பெருக்கம்
[தொகு]அ. அட்ராமிடேனசு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Wilms, T.; Sindaco, R.; Al Jumaily, M.M. (2012). "Acanthocercus adramitanus". IUCN Red List of Threatened Species 2012: e.T199598A2605798. doi:10.2305/IUCN.UK.2012.RLTS.T199598A2605798.en. https://www.iucnredlist.org/species/199598/2605798. பார்த்த நாள்: 20 November 2021.
- 1 2 Acanthocercus adramitanus at the Reptarium.cz Reptile Database
- ↑ Arnold EN (1980). "The Reptiles and Amphibians of Dhofar, Southern Arabia". Journal of Oman Studies. Special Report No. 2: 273–332. (Agama adramitana, pp. 291–292).
