அகாசுரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகாசுரன்,18-ஆம் நூற்றாண்டு ராசசுத்தான் ஒவியம்
கிருஷ்ணன் பாம்பு வடிவிலுள்ள அகாசுரனை அடக்குதல்

அகாசூரன் (Aghasura) என்பவன் இந்து மற்றும் வேத இதிகாசங்களின் கூற்றின்படி ஒரு அரக்கன் ஆவான். அகாசுரன் கம்சனின் தளபதிகளில் ஒருவன்.[1][2] புத்தனா மற்றும் பகாசுரானின் அண்ணணாவான்.

பாகவத புராணத்தின்படி கண்ணனைக் கொல்ல கம்சனால் அகாசுரன் அனுப்பப்படுகிறான். கண்ணன் நண்பர்களோடு விளையாடும் இடத்தில்  அகாசுரன் பெரிய பாம்பு வடிவு எடுத்து, வாயைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தான். மாடு மேய்த்துக்கொண்டிருந்த கண்ணனின் தோழர்கள், அதை மலைக்குகை என்று நினைத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டனர். மாயக்கண்ணன் அது என்னவென்று அறிந்துகொண்டான். சிரித்துக்கொண்டே உள்ளே சென்று அகாசுரன் வாயை மூடமுடியாதவாறு நின்றுகொண்டான். தன் உருவத்தை பெரிதாக்கினான். அசுரன் மூச்சு முட்டி இறந்தான். ஒன்றும் நடக்காதவாறு கண்ணன் நண்பர்களுடன் வீடு வந்து சேர்ந்தான்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. A Dictionary of Hindu Mythology & Religion by John Dowson, ISBN 978-81-246-0108-2
  2. Dowson's Classical Dictionary of Hindu Mythology

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாசுரன்&oldid=2372195" இருந்து மீள்விக்கப்பட்டது