அகஸ்டின் எரிமலை

ஆள்கூறுகள்: 59°21′48″N 153°26′00″W / 59.36333°N 153.43333°W / 59.36333; -153.43333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகஸ்டின் எரிமலை
உயர்ந்த இடம்
உயரம்4,134 அடி (1,260 m)[1]
இடவியல் புடைப்பு1,260 m (4,130 அடி) Edit on Wikidata
பட்டியல்கள்ஐக்கிய அமெரிக்காவில் உள்ள எரிமலைகளின் பட்டியல்
ஆள்கூறு59°21′48″N 153°26′00″W / 59.36333°N 153.43333°W / 59.36333; -153.43333[2]
புவியியல்
அகஸ்டின் எரிமலை is located in Alaska
அகஸ்டின் எரிமலை
அகஸ்டின் எரிமலை
குக் கழிமுகம், அலாஸ்கா
அமைப்பியல் வரைபடம்ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு இலியாம்னா B-2
நிலவியல்
பாறையின் வயது40,000 ஆண்டுகளுக்கு மேல்[2]
மலையின் வகைஎரிமலைக் குழம்புக் கூம்புகள்[2]
Volcanic arcஅலெயூசியன் வளைவு
கடைசி வெடிப்பு2005 - 2006[2]

அகஸ்டின் எரிமலை (Augustine Volcano)என்பது ஒரு சுழல் வடிவ எரிமலை ஆகும். எரிமலை அடிக்கடி வெடிக்கும் தன்மையுடன் உள்ளது, 1883, 1935, 1963-64, 1976, 1986 மற்றும் 2006 இல் இங்கு பெரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. சிறிய வெடிப்பு நிகழ்வுகள் 1812, 1885, 1908, 1944 மற்றும் 1971 இல் பதிவாகியுள்ளன. பெரிய வெடிப்புகளுக்குப் பின்னர் லாவா பீறிட்டு வெளிப்பரவுகிறது. தென்மத்திய அலாஸ்காவின் கெனாய் தீபகற்பப் பகுதியில் உள்ள தென்மேற்குக் "குக்" கழிமுகத்தில் அகஸ்டீன் தீவை இது உருவாக்குகிறது. இது அங்கரேச்சு நகரில் இருந்து தென்மேற்கே 280 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அகஸ்டீன் தீவின் பரப்பளவு 83.872 ச.கி.மீ (32.4 சதுர மைல்). அகஸ்டீனின் மேற்குக் கரைக்குச் சற்று அப்பல் உள்ள வெஸ்ட் தீவின் பரப்பளவு 5.142 கிமீ (2.0 சதுர மைல்).

இந்தத் தீவு முக்கியமாகப் பழைய எரிமலை வெடிப்புப் படிவுகளால் ஆனது. பழைய எரிமலைக் கூம்பு சிதைவடைந்ததால் பெரிய பனிப்பாறைச் சரிவுகள் உருவாகின என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 புவியியல் வரலாறு மற்றும் விளக்கம்   [தொகு]

அகஸ்டின் எரிமலையால்  உருவாக்கப்பட்ட கிட்டத்தட்ட வட்ட வடிவமான மக்கள் வாழாத தீவு, கிழக்கு-மேற்காக 12 கிமீ (7.5 மைல்), வடக்கு-தெற்காக 10 கிமீ (6 மைல்) நீள, அகலங்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழச் சமச்சீரான இதன் நடு உச்சி 4,134 அடி (1,260 மீ) உயரம் கொண்டது.  

USGS map of Augustine Volcano island

அகஸ்டின்   எரிமலை  உச்சி வரலாற்றுக் காலத்திலும், வரலாற்றுக்கு முந்திய காலத்திலும் ஏற்பட்ட வெடிப்புக்களால் உருவான, ஒன்றன்மேலொன்று கவிந்த எரிமலைக் குழம்புக் கூம்புத் தொகுதியைக் கொண்டுள்ளது. அதன் சரிவுகளில் வெளித்தெரியும் உடைவுக் கழிவுகள் கூம்புப் பாறை அன்டெசைட்டால் ஆன கோணக் குற்றிகளைக் கொண்டுள்ளன. இவை உருள்கற்கள் முதல் பாறாங்கற்கள் வரையிலான அளவுகளைக் கொண்டவை. ஆனால் 4 முதல் 8 மீட்டர் (10 முதல் 25 அடி) வரை பெரியனவும், அரிதாக 30 மீட்டர் (100 அடி) அளவுள்ள பாறைத் துண்டுகளும் காணப்படுகின்றன.


சான்றுகள்[தொகு]

  1. "Augustine Description and Statistics". Alaska Volcano Observatory. United States Geological Survey. Archived from the original on 14 January 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-01-19.
  2. 2.0 2.1 2.2 2.3 "Augustine". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 2009-01-19.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகஸ்டின்_எரிமலை&oldid=3585871" இலிருந்து மீள்விக்கப்பட்டது