அகவைக் குறைத்தல் (திரைப்படத் தொழில்நுட்பம்)
திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் அகவைக் குறைத்தல் (De-aging in film) என்பது காட்சி விளைவுகளைப் பயன்படுத்தி ஒரு நடிகரின் வயதைக் கதைக்கேற்ப குறைத்துக் காட்டுவதாகும். இது கணினி வரைகலையின் மூலம் சாத்தியமாகிறது.[1]
மார்ட்டின் ஸ்கார்செஸால் இயக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு வெளியான தி ஐரிஷ்மேன் திரைப்படம் பெரும்பாலும் அகவைக் குறைத்தல் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களுக்கு வயது 60 முதல் 80 இருப்பினும் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 40 வயது வரைக் குறைத்து காண்பிக்கப்பட்டது.[2]
மெய்நிகர் நடிகர்
[தொகு]சில முறை காட்சி விளைவுகளைப் பயன்படுத்தியும் அகவைக் குறைத்தல் திருப்திகரமாக இல்லாத பட்சத்தில், முழுக்க முழுக்க கணினியில் தயாரிக்கப்பட்டு இயக்கப்படும் மெய்நிகர் நடிகர்கள் பயன்படுவார்கள்.
இது குறிப்பிட்ட நடிகரின் அசைவுகளையும் முகபாவனைகளையும் உருவ அமைப்பையும் தொழில்நுட்ப கருவிகள் மூலம் படம்பிடித்து பதிவேற்றி அதற்கேற்ப நிரல் அமைத்து மென்பொருட்களின் உதவி கொண்டு ஏற்பாடு செய்யப்படுகிறது.[3]
சான்றாக, டெர்மினேட்டர் சால்வேஷன் (2009 ஆங்கிலத் திரைப்படம்) என்ற திரைப்படத்தில் ஆர்னோல்டு சுவார்செனேகர் என்கிற நடிகருக்கு பதிலாக ரோனால்டு கிக்கின்கெர் என்ற நடிகர் உருவப்போலியாக நடித்து ஆர்னோல்டின் முகத்திற்கு ஏற்ப கணினியில் உருவம் மாற்றப்பட்டார். பிற டெர்மினேட்டர் திரைப்படங்களிலும் இந்த முறையைப் பின்பற்றினர்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காட்சி விளைவுகளும் நடிகர் அகவைகளும் - மேரிக்ளேர் ஆங்கில வலைத்தளக் கட்டுரை".
- ↑ "தி ஐரிஷ்மேன் - ஆங்கில விக்கிப்பீடியா".
- ↑ "மெய்நிகர் நடிகர்கள் - தி கார்டியன் ஆங்கிலக் கட்டுரை".
- ↑ "டெர்மினேட்டரில் வயது குறைவான ஆர்னால்டு - கீக்டாட்காம் வலைத்தள ஆங்கிலக் கட்டுரை". Archived from the original on 2020-03-21. பார்க்கப்பட்ட நாள் 2021-02-26.
- ↑ "ஆர்னால்டின் உருமாற்றம் - பாப்புலர் மெக்கானிக்ஸ் ஆங்கில வலைத்தளக் கட்டுரை".