அகவல் துள்ளல் ஓசை
Appearance
யாப்பருங்கலம் என்னும் நூல் கலிப்பாவின் துள்ளல் ஓசையை மூன்று வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. [1] அவற்றில் ஒன்று அகவல் துள்ளல் ஓசை.
- எடுத்துக்காட்டு
செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லல்ஒங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே [2]
- விளக்கம்
இந்தக் கலிப்பா நேரசையில் தொடங்கிக் கலித்தளையுடன் வெண்டளையும் பெற்று வந்துள்ளதால் அகவல் துள்ளல்.
மேற்கோள்
[தொகு]- ↑ அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 226
- ↑ அவன் சினம் கொண்ட கண்ணன். அவன் அம்பு எய்தான். அது மற மன்னர் தலையைச் சாய்த்தது. பின்னர் மேகத்தில் நுழையும் நிலாப் போல யானைமீது பாய்ந்து ஒளிந்துகொண்டது - இது பாடல் தரும் செய்தி