அகழிப் பாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகழிப் பாசனம் என்பது தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள நிலங்களில் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் நீர் தேங்கி நிற்கின்றது. இத்தகைய நிலங்களில் பயிர்களுக்கு இடையிலான ஆழமான குழிகள் ஏற்படுத்தப்பட்டு பாசனம் செய்யும் முறைக்கு அகழிப் பாசனம் என்று பெய்ர்.

பயன் பெறும் பயிர்கள்:

 1) கரும்பு
 2)  வாழை
 3) வெற்றிலைக்கொடி

அகழிப் பாசனத்தின் அமைப்பு[தொகு]

சுமார் 4 மீட்டர் இடைவெளிக்கு ஒரு அகழி வெட்டப்படுகிறது. இந்த அகழிகள் 30 செ.மீ அகலமும்,60 செ.மீ ஆழமும் உடையதாக இருக்கும். இதற்கு இடையேயுள்ள இடைவெளியில் பயிரிடப்படுகிறது.நீர்ப்பாசன மூலகங்களில் இருந்து வருகின்ற பாசன நீர் வாய்க்கால்களின் மூலம் அகழிகளுக்கு கொண்டு வரப்பட்டு அகழிகளில் தேங்கி நிற்கின்றது. அதிக அளவு மழைநீர் இந்த அகழிகளின் மூலம் நிலத்திலிருந்து வெளியேற்றப் பயன்படுவதால் இவை வடிகால்களாகவும் பயன்படுகின்றன.

நிறைகள்/நன்மைகள்: 1.அகழிப் பாசன முறையில் நீர் பாய்ச்சுவதற்கு குறைந்த அளவு ஆட்கள் போதுமானது. 2. அதிக நீரினால் பயிர் பாதிக்கப்படாமல் வடிந்து விடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகழிப்_பாசனம்&oldid=2376365" இருந்து மீள்விக்கப்பட்டது