உள்ளடக்கத்துக்குச் செல்

அகல்யாநகர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 19°05′53″N 74°43′57″E / 19.09806°N 74.73250°E / 19.09806; 74.73250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமது நகர் மாவட்டம்
अहमदनगर जिल्हा
அகமது நகர்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்நாசிக் கோட்டம்
தலைமையகம்அகல்யாநகர்
பரப்பு17,413 km2 (6,723 sq mi)
மக்கட்தொகை4,543,080 (2011)
மக்கள்தொகை அடர்த்தி260/km2 (670/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை17.67%
படிப்பறிவு80.22%
பாலின விகிதம்934
வட்டங்கள்1. அகோலே 2. கர்ஜத் 3. கோபர்காவ 4. ஜாம்கேடு 5. அகல்யாநகர் வட்டம் 6. நேவாசா 7. பாதர்டி 8. பார்னேர் 9. ராஃகாதா 10. ராஃகுரி 11. சேவகாம்வ 12. ஸ்ரீகோந்தா 13. ஸ்ரீராம்பூர் 14. சங்கம்னேர்
மக்களவைத்தொகுதிகள்அகமது நகர், சீரடி [1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை13
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 50, தேசிய நெடுஞ்சாலை 222
சராசரி ஆண்டு மழைபொழிவு501 mm

அகல்யாநகர் மாவட்டம் (பழைய பெயர்:அகமது நகர் மாவட்டம், மகாராஷ்டிராவில் உள்ளது. இதன் தலைமையகம் அகல்யாநகரில் உள்ளது. இந்த மாவட்டம், நாசிக் கோட்டத்திற்கு உட்பட்டது.

அகல்யாநகர் மாவட்டத்தில் புகழ் பெற்ற சீரடி நகரம், சித்தி விநாயகர் கோயில், அஷ்ட விநாயகர் கோயில், சனி சிங்கனாப்பூர் கோயில் மற்றும் சாய்பாபா கோயில்கள் உள்ளது.

இங்கு சுற்றுப்புறத்தைப் பாதுகாத்து முன்னேறியுள்ள ராலேகாண் சித்தி எனப்படும் ஊர் உள்ளது.[2]

பெயர் மாற்றம்

[தொகு]

இம்மாவட்ட ப் பகுதியை ஆட்சி செய்த மராத்திய அரசி, அகல்யாபாய் நினைவாக மகாராட்டிரா மாநிலத்தை ஆளும் மகா யுதி கூட்டணி அரசின் முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே, அகமத்நகர் நகரம் மற்றும் அகமத்நகர் மாவட்டத்தின் பெயரை அகல்யாநகர் மாவட்டம் என்றும், தலைமையிடமான அகமத்நகர் என்பதை அகல்யாநகர் என்றும் பெயர் மாற்ற செய்ய இந்திய அரசிடம் மே 2023ல் கோரிக்கை வைத்தார்.[3] மகாராட்டிரா முதலமைச்சரின் கோரிக்கையை இந்திய அரசு அக்டோபர் 2024ல் ஏற்றது.[4][5][6]

பொருளாதாரம்

[தொகு]

இந்த மாவட்டம் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[7]

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டத்தை 7 கோட்டங்களாகவும் 14 வருவாய் வட்டங்களாகவும் பிரித்துள்ளனர்.[8] அவை:

  1. அகோலே
  2. கர்ஜத்
  3. கோபர்காவ்
  4. ஜாம்கேடு
  5. அகல்யாநகர் வட்டம்
  6. நேவாசா
  7. பாதர்டி
  8. பார்னேர்
  9. ராஃகாதா
  10. ராஃகுரி
  11. சேவ்காவ்
  12. ஸ்ரீகோந்தா
  13. ஸ்ரீராம்பூர்
  14. சங்கம்னேர்

சட்டமன்ற & நாடாளுமன்றத் தொகுதிகள்

[தொகு]

மக்களவைத் தொகுதிகள்:

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 4,543,083 மக்கள் வாழ்ந்தனர்.[9] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 266 பேர் வாழ்கின்றனர்.[9] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 934 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[9] இங்கு வசிப்போரில் 80.22% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[9]

சான்றுகள்

[தொகு]
  1. "Election Commission website" (PDF). Archived from the original (PDF) on 2009-03-06. Retrieved 2014-07-03.
  2. "A model Indian village- Ralegaon Siddhi". Archived from the original on 2006-10-11. Retrieved 2006-10-30.
  3. Maharashtra's Ahmednagar to be renamed as Ahilya Nagar, announces CM Eknath Shinde
  4. {https://timesofindia.indiatimes.com/city/nashik/ahmednagar-officially-renamed-ahilyanagar-a-tribute-to-warrior-queen-ahilyabai-holkar/articleshow/114095693.cms Ahmednagar is now officially Ahilyanagar]
  5. Centre approves Maharashtra's proposal to rename Ahmednagar as Ahilyanagar
  6. {https://www.deccanherald.com/india/maharashtra/maharashtras-ahmednagar-officially-renamed-to-ahilyanagar-3220795 Maharashtra's Ahmednagar officially renamed to Ahilyanagar]
  7. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. Retrieved September 27, 2011.
  8. Ahmednagar is divided into 7 Revenue Divisions & 14 Tahsils
  9. 9.0 9.1 9.2 9.3 "District Census 2011: Ahmadnagar". Registrar General & Census Commissioner, India. 2011. Archived from the original on 8 செப்டம்பர் 2011. Retrieved 3 ஜூலை 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)

இணைப்புகள்

[தொகு]

19°05′53″N 74°43′57″E / 19.09806°N 74.73250°E / 19.09806; 74.73250

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகல்யாநகர்_மாவட்டம்&oldid=4238502" இலிருந்து மீள்விக்கப்பட்டது