உள்ளடக்கத்துக்குச் செல்

அகர்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகர்பால்
அகர்பால் அருவி
அகர்பால் அருவி
அகர்பால் is located in ஜம்மு காஷ்மீர்
அகர்பால்
அகர்பால்
சம்மு காசுமீரின் அகர்பாலின் அமைவிடம்
அகர்பால் is located in இந்தியா
அகர்பால்
அகர்பால்
அகர்பால் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°38′45.4560″N 74°46′50.4696″E / 33.645960000°N 74.780686000°E / 33.645960000; 74.780686000
நாடுஇந்தியஆ
மாநிலம்சம்மு காசுமீர்
மாவ்ட்டம்குல்காம்
அரசு
  வகைமக்களாட்சி
ஏற்றம்
2,266 m (7,434 ft)
மொழிகள்
  அலுவல்காஷ்மீரி, உருது, இந்தி, தோக்ரி, ஆங்கிலம்[1][2]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

அகர்பால் (Aharbal) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான சம்மு காசுமீரிலுள்ளர் காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்மேற்குப் பகுதியில், கோடைகாலத் தலைநகரான சிறிநகரின் தெற்கே அமைந்துள்ள ஒரு மலை வாழிடமாகும். இங்குள்ள அகர்பால் அருவி காஷ்மீரின் நயாகரா அருவி என்றும் அழைக்கப்படுகிறது. [3]

புவியியல்

[தொகு]

அகர்பால், சம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் நூராபாத் பகுதியில்[4] அமைந்துள்ளது. இது ஜீலம் ஆறின் துணை ஆறான வேசா ஆற்றில், பீர் பாஞ்சால் மலைத்தொடருக்குள் பைன் மற்றும் பிர் மரங்களால் சூழப்பட்ட ஒரு அல்பைன் தூந்திரப் பகுதியாக அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2266 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

அகர்பால் அருவி

[தொகு]
Niagara Falls
அகர்பால் அருவியின் ஒரு காட்சி

அகர்பால் அருவியில் வேசா ஆறு கிரானைட் பாறைகளின் குறுகிய பள்ளத்தாக்கு வழியாக 25 மீட்டர் மற்றும் 7 மீட்டர் உயரத்திலிருந்து சத்தத்துடன் விழுகிறது. இதில் விழும் நீரின் அளவு காரணமாக இந்த அருவி, காஷ்மீரின் நயாகரா அருவி என்றும் அழைக்கப்படுகிறது. அருவிக்கு செல்லும் பாதை வழுக்கலாக இருப்பதால் கம்பி வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட்டுள்ளது.[5] [6] [7] [8]

அணுகல்

[தொகு]

குல்காம் மாவட்டத்தின் நூராபாத் துணைப் பிரிவில் அகர்பால் அருவி அமைந்துள்ளது. சிறிநகரிலிருந்து சோபியான் வழியாக எளிதாக அணுகலாம். சிறிநகரையும் பூஞ்சையும் இணைக்கும் முகலாய சாலையிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. புல்வாமா மற்றும் சோபியான் வழியாக தானுந்து அல்லது பேருந்தில் செல்லும் 75 கி.மீ பயணத்திற்கு 3 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே ஆகும். குல்காம் - நெகாமா-டிஹெச் போரா - கேபி போரா - மான்ஸ்காம்-வட்டூ-அகர்பால் வழியாக ஒரு மாற்று பாதை அகர்பாலுக்கு செல்கிறது. இது குல்காம் மாவட்டத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் உள்ளது. ஜவகர் தேசியச் சுரங்கப்பாதையைக் கடந்த பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நுழையும் முதல் மாவட்டம் ஆகும். கிழக்கில் 44 கி.மீ தொலைவில் உள்ள அனந்த்நாக் தொடருந்து நிலையம் அருகிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும்.[9] [10]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. Retrieved 27 September 2020.
  2. "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020.
  3. "Hill stations in Kashmir". hillstations. Archived from the original on 29 November 2012. Retrieved 2012-11-26.
  4. "Aharbal in district Kulgam" (pdf). Retrieved 2013-06-20.
  5. Allan Stacey (1988). Visiting Kashmir. Hippocrene Books, 1988. p. 129. ISBN 978-0-87052-568-1. Retrieved 27 November 2012.
  6. "Niagara falls of Kashmir". greaterkashmir. Archived from the original on 2013-07-28. Retrieved 2012-11-26.
  7. "Tourist spots JK Tourism". The Economic Times. Archived from the original on 16 October 2015. Retrieved 2012-11-27.
  8. "Girl jumps into Aharabal Falls". kashmirimages.com. Archived from the original on 2013-01-20. Retrieved 2012-11-26.
  9. "Aharbal Waterfalls". indiatourisminfo.net. Retrieved 2012-11-26.
  10. M.S. Kohli (1983). Himalayas: Playground of the Gods -Trekking, Climbing and Adventure. Indus Publishing. pp. 40–42–. ISBN 978-817387107-8. Retrieved 27 November 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
வெளி ஒளிதங்கள்
Aharbal Waterfall
Aharbal Waterfall on YouTube
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகர்பால்&oldid=4249967" இலிருந்து மீள்விக்கப்பட்டது