அகர்தலா புத்தகக் கண்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகர்தலா புத்தகக் கண்காட்சி (Agartala Book Fair) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் தலைநகரமான அகர்தலாவில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறுகிறது. இக்கண்காட்சி பத்து நாட்களுக்கு மேல் நடைபெறுகிறது.[1][2] திரிபுரா மட்டுமின்றி புது தில்ல மும்பை , கொல்கத்தா, கவுகாத்தி ஆகிய நகரங்களைச் சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் கண்காட்சியில் கடைகளை அமைக்கின்றனர். பல்வேறு கருப்பொருள்கள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கவிஞர்களின் கூட்டங்கள் குறித்த கருத்தரங்குகளும் இங்கு நடத்தப்படுகின்றன.[1][3][4][5]

திரிபுராவின் கலாச்சார பன்முகத்தன்மை என்ற கருப்பொருளுடன் 2022 ஆம் ஆண்டுக்கான 38 ஆவது புத்தகக் கண்காட்சி 12 நாட்கள் நடைபெற்றது. திரிபுராவில் இருந்து 76 கடைகள், வங்காளத்தில் இருந்து 39 கடைகள், கவுகாத்தியில் இருந்து ஐந்து கடைகள், புது தில்லியில் இருந்து இரண்டு மற்றும் மும்பை மற்றும் அண்டை நாடான வங்காளதேசத்தில் இருந்து தலா ஒன்று என கண்காட்சியில் 124 புத்தகக் கடைகள் அமைக்கப்பட்டன.

வரலாறு[தொகு]

அகர்தலா புத்தகக் கண்காட்சி 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[6] இரண்டு ஆண்டுகள் தவிர புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. புது தில்லி மற்றும் கொல்கத்தா புத்தகக் கண்காட்சிகளுக்குப் பிறகு, அகர்தலா புத்தகக் கண்காட்சி இந்தியாவில் மிகவும் பிரபலமான புத்தகக் கண்காட்சியாகும்," என்று திரிபுரா பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ரகுநாத் சர்க்கார் கூறுகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Agartala book fair begins, bibliomania grips people". Business Standard (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-12.
  2. "Prominent literary figures to assemble at Agartala Book Fair". NORTHEAST NOW (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-12.
  3. "Agartala book fair from today". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-12.
  4. "12 day long 38th Agartala book fair inaugurated". www.tripurachronicle.in. Archived from the original on 2020-02-28. பார்க்கப்பட்ட நாள் 2021-02-12.
  5. "Agartala Book Fair begins". www.outlookindia.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-02-12.
  6. Agartala 40th Book Fair, 22 March 2022, 4th page, Dainik Sambad.