அகரம் பாலமுருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகரம் பாலமுருகன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:அகரம், ஓசூர் வட்டம்
சட்டமன்றத் தொகுதி:ஓசூர்
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:பாலமுருகன்
தாயார்:வள்ளி, தெய்வானை
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடிக் கார்த்திகை
நவராத்திரி
கார்த்திகை விளக்கீடு
தேர்த்திருவிழா
கோயில் பக்கவாட்டு தோற்றம்

அகரம் பாலமுருகன் கோயில் என்னும் கோயில் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூர் இராயக்கோட்டை சாலையில் உள்ள அகரம் என்ற ஊரில் உள்ள முருகன் கோயில் ஆகும்.[1] இக்கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

வரலாறு[தொகு]

இவ்வூரில் நெடுஞ்சாலை ஒட்டி உள்ள இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகும். இக்கோயியில் குளத்துடன் அமைந்திருந்தது. கோயிலை புதுப்பிக்க எண்ணியவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இக்கோயிலுக்கு பக்கத்திலேயே புதியதாக ஒருகோயிலைக்க்ட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அமைப்பு[தொகு]

கோயில் வளாகத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சிவன் நவக்கிரகங்கள் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் உள்ள உற்சவர் சன்னதியில் பாலமுருகனையும், வள்ளி தெய்வானை உடனுறை முருகனையும் காணலாம்.

விழாக்கள்[தொகு]

ஒவ்வோராண்டும் ஆடிக் கார்த்திகை அன்று பாலமுருகனுக்கு அபிசேக ஆராதனைகளும் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன. புரட்டாசி அமாவாசையை அடுத்துவரும் 9 நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்பட்டு, விஜயதசமியன்று உற்சவரின் ஊர்வலம் நடக்கிறது. கார்த்திகை தீபத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது அன்று சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. தைபூசத்தன்று தேர்திருவிழா நடக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்". கட்டுரை. தினமலர். பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2018.
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 55. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரம்_பாலமுருகன்_கோயில்&oldid=3865071" இலிருந்து மீள்விக்கப்பட்டது