அகரக்கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகரக்கட்டு
—  கிராமம்  —
அகரக்கட்டு
இருப்பிடம்: அகரக்கட்டு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°59′58″N 77°19′55″E / 8.9993691°N 77.3320556°E / 8.9993691; 77.3320556ஆள்கூறுகள்: 8°59′58″N 77°19′55″E / 8.9993691°N 77.3320556°E / 8.9993691; 77.3320556
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஜி. கே. அருண் சுந்தர் தயாளன், இ. ஆ . ப
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

திரு. தனுஷ் எம். குமார்

சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

முகம்மது அபுபக்கர் (இஒமுலீக்)

மக்கள் தொகை

அடர்த்தி

4,828 (2001)

30.27/km2 (78/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 750 சதுர கிலோமீட்டர்கள் (290 sq mi)
அகரக்கட்டு அந்தோனியார் தேவாலயம்

அகரக்கட்டு (Agarakattu), தென்காசி நகருக்கு அருகே, அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கிராமம். 1956 வரை அகரக்கட்டு மற்றும் செங்கோட்டை முதல் சாம்பவர் வடகரை வரை திருவிதாங்கூர் அரசின் (இன்றைய கேரளா) கீழ் இருந்தது. செங்கோட்டை மற்றும் நாகர்கோவிலில் நடைபெற்ற போராட்டம் மற்றும் 11 பேரின் வீர மரணத்திற்கு பின் 1956 ல் அப்போதைய முதல்வர் காமராஜரின் காலத்தில் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. இங்கு ஜீன் மாதத்தில் நடக்கும் புனித அந்தோனியார் ஆலய திருவிழா மற்றும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகியவை பிரசித்தி பெற்றவை.

வரலாறு[தொகு]

பல ஆண்டுகளுக்கு முன்பு ஆய்க்குடியில் பிராமணர்கள் அதிகம் பேர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எழுதுவதற்கும், ஆவணங்களை பாதுகாப்பாக எழுதி பராமரிக்கவும் பனை ஓலைகளைப் பயன்படுத்தினர். இந்த பனை ஓலைகளை மரத்திலிருந்து வெட்ட, பனையேறும் தொழில் செய்து வந்த நாடார் சமூகத்தைச் சேர்ந்த மக்களை திருச்செந்தூர் அருகே உள்ள மூலகாடு ஊரில் இருந்து வரவழைத்தனர். பின்னர் அம்மக்கள் பிராமணர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆய்க்குடியை அடுத்த காட்டுப்பகுதியில் குடியேறினர். அது அவரைச் செடிகள் மற்றும் பனைமரங்கள் நிறைந்த அவரைக்காடு ஆகும். இங்கு பனை ஓலைகளால் குடிசை அமைத்து வாழ்ந்தனர். பின்னர் இப்பகுதி அவரைக்காடு என அழைக்கப்பட்டு, அவரக்காடு என திரிந்து, தற்போது அகரை அல்லது 'அகரக்கட்டு என அழைக்கப்படுகிறது. பின்னர் விவசாயம் செய்து, பனையேறி படிப்படியாக உயர்ந்தனர்.

மாநில எல்லை பிரச்சினை[தொகு]

இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது திருவிதாங்கூர் சமஸ்தானம் (இன்றைய கேரளா) இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இணைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்துடன் செங்கோட்டை முதல் SV கரை வரையிலான அகரையை உள்ளடக்கிய தமிழக பகுதிகள் இணைக்கப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தான வரைபடம் Trivancore Province Map
திருவிதாங்கூர் வரைபடத்தில் அகரக்கட்டு, ஆய்க்குடி, சாம்பவர் வடகரை பகுதிகள்

அக்காலத்தில் தென் திருவிதாங்கூரின் தாலுக்காவான செங்கோட்டை மக்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களை மலையாள திருவிதாங்கூர் அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த செங்கோட்டை தமிழர்கள், திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி கன்னியாகுமரியில் மார்சல் ஏ.நேசமணி தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழக மக்கள் பல உயிர் தியாகங்கள், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகா (அகரை, கம்பிளி பகுதிகள்) தமிழகத்துடன் இணைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த சாதி கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த சாதிக் கொடுமைகளும் இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது. பின்னணி: 'முதல் காரணம்:' மத்திய அரசின் தமிழக பகுதிக்கான நீர்பாசன திட்டங்களை திருவிதாங்கூர் சமஸ்தான அரசு தடுத்தது. 'இரண்டாம் காரணம்:' திருவிதாங்கூர் நாடு இந்து ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் சாதிக் கோட்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது. 'மூன்றாம் காரணம்:' தமிழ் மக்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சாரந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் முதலமைச்சராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். மங்காட்டில் தேவசகாயம், கீழ்குளத்தில் செல்லையன் இருவரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுகளுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையின் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணு பிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழக மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் 11 பேர் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த 5 பேர் வீரமரணம் அடைந்தனர். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள் நாடார் சமுதாய மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாகும்.

வளர்ச்சி[தொகு]

தென்காசி பகுதியில் ஆலயம் அமைத்து பணி செய்து வந்த இயேசு சபை குருக்களின் பார்வை அவரக்காட்டின் பக்கம் திரும்பியது. கல்வி என்னும் அறிவொளியை ஏற்றி, RC பள்ளிக்கூடம் அமைத்தனர். தற்போது இது மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடும் உழைப்புக்கு பெயர்பெற்றது இவ்வூர். ஏனெனில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பீடி சுற்றி, விவசாயம் செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். இங்கு ஆண்கள் மட்டுமே உயர்கல்வி கற்கும் நிலை பல ஆண்டுகளாக காணப்பட்டது. பெண்களை வெளியூரில் படிக்க வைக்க பெற்றோர்கள் தயங்கினர். ஆனால் இவ்வூரில் கல்லூரி அமைந்த பிறகு பெண்களும் உயர்கல்வி கற்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்வியில் தன்னிறைவை நோக்கி பயணிக்கிறது அகரை சிற்றூர்.

அடிப்படை வசதிகள்[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 657
சிறு மின்விசைக் குழாய்கள் 4
கைக்குழாய்கள் 2
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 0
உள்ளாட்சிக் கட்டடங்கள் 2
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1
ஊரணிகள் அல்லது குளங்கள் 2
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள் 1
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 1
ஊராட்சிச் சாலைகள் 1
பேருந்து நிறுத்தங்கள் 2
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3
தெருக்கள் 26
கோவில்கள் 6
தேவாலயங்கள் 6
மருத்துவமனைகள் 1
நியாயவிலைக்கடைகள் 1
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் 0
வானிலை முன்னறிவிப்பு நிலையம் 0
வேளாண் கூட்டுறவு வங்கிகள் 0
வங்கிகள் 1

கோவில்கள்[தொகு]

விநாயகர் கோவில்

கிருஷ்ணன் கோவில்

அம்மன் கோவில்

கரடிமாடசுவாமி கோவில்

தேவாலயங்கள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை:

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின், ஒரு தனிப்பங்கு ( PARISH) அகரக்கட்டு ஆகும். இங்கு

புனித பதுவை அந்தோனியார் ஆலயம்

புனித மர்க்கிரீத் மரியாள் ஆலயம்

புனித கன்னி மரியாள் ஆலயம்

இரக்கத்தின் அன்னை சிற்றாலயம்.(@ JP College )

ஆகிய கத்தோலிக்க ஆலயங்கள் உள்ளன.

புனித அந்தோனியார் ஆலய உட்புற தோற்றம்
தூய கன்னி மரியா சிற்றாலயம்
புனித மர்க்கிரீத் மரியா ஆலயம், அகரக்கட்டு

கத்தோலிக்கம் அல்லாதவை:

இந்திய தேவ சபை ( Pentecostal)

AG சபை (AG)

இவான்சலிக்கன் சபை

கல்வி நிறுவனங்கள்[தொகு]

பள்ளிகள்

புனித அருளானந்தர் மேல் நிலைப் பள்ளி (St.Britto's Higher Secondary School )

அரசு ஆரம்பப் பள்ளி

புனித வளனார் சர்வதேச CBSC பள்ளி (St.Joseph's Global International CBSC School)

அரசு அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்கள்

கல்லூரிகள்

JP பொறியியல் கல்லூரி

JP கலை மற்றும் அறிவியல் கல்லூரி

JP கல்வியியல் கல்லூரிகள்

போக்குவரத்து[தொகு]

பேருந்து நிறுத்தங்கள்

அந்தோனியார் சர்ச்

அரசு ஆரம்பப் பள்ளி

அகரை SKT நகர்

அகரை ஜே. பி கல்லூரி

அகரை விலக்கு

பேருந்து வழித்தடங்கள்

மாநில நெடுஞ்சாலை எண் 39A. (SH-39A) அகரக்கட்டின் வழியாக செல்கிறது.

கீழ்க்கண்ட வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் அகரக்கட்டு நிறுத்தத்தில் நின்று செல்லும். மேலும் 2 முதல் 4 முறை மறுமார்க்கத்திலும் இயக்கப்படும்.

தென்காசி -இடையர்தவணை (5,5M)

தென்காசி - சுரண்டை (D5)

தென்காசி-சுரண்டை (D5 Exp)

தென்காசி-வீராணம் (14,14A)

தென்காசி -சேர்ந்தமரம் (7)

தென்காசி- சேர்ந்தமரம்-சங்கரன்கோவில் (SFS)

தென்காசி-சுரண்டை- தேவர்குளம் (SFS)

தென்காசி-சுரண்டை-திருநெல்வேலி (SFS)

செங்கோட்டை - சுரண்டை (10, 10A, 10D)

செங்கோட்டை -வீரகேரளம்புதூர் (10Exp)

செங்கோட்டை - திருநெல்வேலி (Private)

திருமலைக்கோவில் - திருநெல்வேலி (SFS)

திருமலைக்கோவில் -சுரண்டை (8)

ஊர்மேலழியான்-ஆய்க்குடி-தென்காசி (private)

செங்கோட்டை-சங்கரன்கோவில்-சென்னை (SETC)

செங்கோட்டை-சுரண்டை-சென்னை (SETC)

***அடைப்புக்குறிக்குள் காணப்படுவது வழித்தட எண்கள் ஆகும்.


அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்[தொகு]

அருகிலுள்ள விமான நிலையங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரக்கட்டு&oldid=3028437" இருந்து மீள்விக்கப்பட்டது