அகமத் புகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமத் புகாரி
अहमद बुखारी
தலைமை இமாம்
ஜாமா மஸ்ஜித், டெல்லி
பதவியில் உள்ளார்
பதவியில்
14 அக்டோபர் 2000
முன்னையவர்அகமத் புகாரி
பின்னவர்சாபான் புகாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபுது டெல்லி, இந்தியா
தேசியம்இந்தியன்

அகமது புகாரி டெல்லியின் ஜாமா மஸ்ஜித்தின் 13 வது தலைமை இமாம் ஆவார் .[1]

வம்சாவளி மற்றும் நியமனம்[தொகு]

அகமது புகாரி தனது தந்தை அப்துல்லா புகாரிக்குப் பிறகு 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று டெல்லியில் ஜமா மஸ்ஜித்தின் தலைமை இமாமாக நியமிக்கப்பட்டார்.[2] 2014 ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று, அகமத் புகாரி தனது மகன் சாபான் புகாரியை, தனக்கு அடுத்து தலைமை இமாம் பொறுப்புக்கு வருவார் என்று அறிவித்தார்.[3]

மோடி மீது நிலை[தொகு]

2014 ஆம் ஆண்டு, டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், அகமத் புகாரி பின்வருமாறு கூறினார், “மோடி 125 கோடி இந்தியர்களின் பிரதமராக உள்ளார். ஆனால் அவர் முஸ்லிம்களிடம் உரையாற்றுவதை மட்டும் வசதியாகவும், வேண்டுமென்றே தவிர்க்கிறார். எங்களை அவருக்கு பிடிக்கவில்லை என்று காட்டியுள்ளார். அவர் தன்னை ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து தூரமாக இருப்பதை பேணி பாதுகாத்து வருகிறார். எனவே, நானும் எனது தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தேர்ந்தெடுத்தேன்." [1]

சர்ச்சை[தொகு]

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று, ஒரு இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நடந்த பிரச்சனையில் அகமத் புகாரி தலைமையிலான ஒரு கும்பல், பணியில் இருந்த காவல்துறையினரை மற்றும் அரசு ஊழியரை தாக்கியதாக புகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.[4] இந்த வழக்கில் புகாரிக்கு எதிரான வாரண்டுகள் டெல்லி நீதிமன்றத்தால் மீண்டும் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் புகாரியை கைது செய்தால் சமூகத்தில் பதற்றம் உண்டாகும் என்பதற்காக டெல்லி காவல்துறையினர் இவரை கைது செய்ய முடியவில்லை.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Eyebrows raised as Bukhari invites Sharif, snubs Modi".
  2. Jama Masjid gets new Shahi imam on 14 October 2000, The Milli Gazette newspaper, Published 1 November 2000, Retrieved 18 May 2017
  3. Syed Abdullah Bukhari, former Shahi Imam of Jama Masjid, Delhi passes away The Hindu newspaper, Published 9 July 2009, Retrieved 18 May 2017
  4. Anand, Utkarsh. "Warrant for Maulana Syed Ahmed Bukhari, cops ordered to execute it". இந்தியன் எக்சுபிரசு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமத்_புகாரி&oldid=3742098" இலிருந்து மீள்விக்கப்பட்டது