உள்ளடக்கத்துக்குச் செல்

அகமத் அத்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமத் அத்லி
Ahmed Adly
நாடு எகிப்து
பிறப்பு19 பெப்ரவரி 1987 (1987-02-19) (அகவை 37)
எகிப்து, கெய்ரோ
பட்டம்கிராண்டு மாசுட்டர்
பிடே தரவுகோள்2596 (திசம்பர் 2021)
(வரிசை எண். 256 சனவரி 2015 பிடே தரப்புள்ளிகள்)
உச்சத் தரவுகோள்2640 (சனவரி 2011)

அகமத் அத்லி (Ahmed Adly) எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார் ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் நாள் பிறந்தார்.

2005 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க சதுரங்கச் சாம்பியன் பட்டத்தையும் 2007 ஆம் ஆண்டு உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டத்தையும் அகமத் அத்லி வென்றுள்ளார்[1]. ஐசுலாந்து நாட்டின் ரெய்க்யவிக் நகரத்தில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைவருக்குமான சதுரங்கப் போட்டியில், காப்ரியல் சர்கிசியன், சாக்ரியர் மேமிதையரோவ், இகோர்-அலெக்சாந்தர் நடாப், பென்டலா அரிகிருட்டிணன் ஆகியோருடன் ஒன்று முதல் ஐந்து வரையிலான இடங்களுக்கான போட்டியில் சமநிலை வகித்தார்[2]. இதேபோல 2008 ஆம் ஆண்டு ஆம்பர்க்கில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சிகர்த்சு லங்கா, தோரியன் ரோகோசெங்கோ ஆகியோருடன் சேர்ந்து முதல் மூன்று இடங்களுக்கான போட்டியில் சமநிலை வகித்தார்[3]. 2009 இல் நடைபெற்ற உலோக கோப்பை சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்ட இவர் முதல் சுற்றில் உருசியாவைச் சேர்ந்த விக்டர் போலோகன்னிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்[4]

சாம்பியன் பட்டங்கள்

[தொகு]

1.அர்மீனியாவில் நடைபெற்ற 2007 ஆம் ஆண்டுக்கான உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டம் 2.2004 ஆம் ஆண்டு கிரீசு நாட்டில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Namibianchessfederation.com – Profile of GM Ahmed Adly". Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2009-05-03.
  2. "Reykjavík Open 2006". Chess-Results.com. 2006-03-20. பார்க்கப்பட்ட நாள் 7 May 2011.
  3. "Internationale Hamburger Meisterschaft". FIDE. பார்க்கப்பட்ட நாள் 13 April 2011.
  4. Crowther, Mark (2009-12-15). "The Week in Chess: FIDE World Cup Mini-Site 2009". Chess.co.uk. Archived from the original on 20 October 2011. பார்க்கப்பட்ட நாள் 16 December 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமத்_அத்லி&oldid=3585865" இலிருந்து மீள்விக்கப்பட்டது