அகமது ரஷீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகமது ரஷீத் (Ahmed Rashid உருது : Pakistan احمد رشید ; பாகிஸ்தானில் 1948 இல் பிறந்தார்) என்பவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா பற்றி பல புத்தகங்களை எழுதிய ஒரு பத்திரிகையாளர் மற்றும் அதிகம் விற்பனையாகும் வெளியுறவுக் கொள்கை ஆசிரியர் ஆவார்.

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

அகமது ரஷீத் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் 1948 ஆம் ஆண்டில் பிறந்தார். 1960 களின் பிற்பகுதியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இங்கிலாந்தின் மால்வர்ன் கல்லூரி, லாகூர் அரசு கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ், ஃபிட்ஸ்வில்லியம் கல்லூரி போன்றவற்றில் கல்வி பயின்றார் .[1]

அங்கு பட்டம் பெற்ற பிறகு, மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மலைகளில் ரஷீத் பத்து ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் ஆயுப் கான் மற்றும் யஹ்யா கான் ஆகியோரின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக ஒரு எழுச்சியை ஏற்பாடு செய்ய முயன்றார். மேலும் இவர் தனது வாழ்நாளின் கொரில்லா முறை சண்டைகளை நிறைவு செய்துவிட்டு தான் வாழும் பகுதியினைப் பற்றி எழுதுவதில் கவனம் செலுத்தத் துவங்கினார்.[1]

அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டெய்லி டெலிகிராப்பின் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா நாடுகளின் நிருபராகவும், கிழக்கு பொருளாதார மறுஆய்வுக்கான நிருபராகவும் இருந்துள்ளார். வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், தி நேஷன், டெய்லி டைம்ஸ் (பாகிஸ்தான்) மற்றும் சில கல்வி இதழ்களிலும் இவர் எழுதி வந்துள்ளார். சர்வதேச தொலைக்காட்சி வரிசைகள் , பாக்கிஸ்தான் தொலைக்காட்சிகள் மற்றும் சி.என்.என், பிபிசி வேர்ல்ட் போன்ற வானொலி நெட்வொர்க்குகளில் அவர் தோன்றியுள்ளார் [2]

அவர் ஈராக் போர் மற்றும் தலிபான் பிரச்சினையை புறக்கணித்ததாகக் கூறப்படுவது தொடர்பான புஷ் நிர்வாகம் போன்ற நிகழ்வுகளின் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.[1] 2000 ஆம் ஆண்டில் தலிபான்: மத்திய ஆசியாவில் மிலிட்டன்ட் இஸ்லாம், எண்ணெய் மற்றும் அடிப்படைவாதம் எனும் நூலினை வெளியிட்டார்.[3] நியூயார்க் டைம்சின் அதிகம் விற்பனையான நூல்களில் ஐந்தாவது இடத்தினைப் பிடித்தது. மேலும் இந்த நூல் 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின்னர் அந்த நூல் 1.5 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன.[4] முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புஷ் அவரின் நினைவுகளை பற்றி எழுதும் போது தனது படைப்புகளைத் திருடினார் என்று ரஷீத் குற்றம் சாட்டினார்.[5] இவரின் வர்ணனைகள் தி வாஷிங்டன் போஸ்டின் போஸ்ட் குளோபல் பிரிவில் இடம்பெறுகிறது. ரஷீத் பல பரவலாக அறியப்படும் தேசிய மற்றும் சர்வதேச வெளியீடுகளில் கட்டுரையாளராகவும் மற்றும் என் பி ஆர் என அறியப்படும் தேசிய பொது வானொலியில் அவ்வப்போது விருந்தினராகவும் கலந்துகொள்வார்.[6] அகமது ரஷீத்திற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானின் பஞ்சாபின் லாகூரில் வசித்து வருகிறார்.[7]

படைப்புகள்[தொகு]

1994 ஆம் ஆண்டில் மத்திய ஆசியாவின் மீள் எழுச்சி: இஸ்லாமா? அல்லது தேசியவாதமா?. 2000 ஆம் ஆண்டில் தலிபான்: மத்திய ஆசியாவில் போராளி இஸ்லாம், எண்ணெய் மற்றும் அடிப்படைவாதம். 2002 ஆம் ஆண்டில் ஜிஹாத்: மத்திய ஆசியாவில் போர்க்குணமிக்க இஸ்லாத்தின் எழுச்சி எனும் நூலினை வெளியிட்டார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_ரஷீத்&oldid=2867936" இருந்து மீள்விக்கப்பட்டது