அகமது பின் அலி விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமது பின் அலி விளையாட்டரங்கம்
Ahmad bin Ali Stadium
அல்-ரய்யான் விளையாட்டரங்கம்
முழுமையான பெயர்அகமது பின் அலி விளையாட்டரங்கம்[1]
அமைவிடம்உம் அல் அஃபேயி, அல்-ரய்யான், கத்தார்
ஆட்கூற்றுகள்25°19′47″N 51°20′32″E / 25.329640°N 51.342273°E / 25.329640; 51.342273
இருக்கை எண்ணிக்கை40,740[2]
தரைப் பரப்புபுல்வெளி
புள்ளியறிவிப்புஉள்ளது.
Construction
Broke ground2001–2002, 2016–2018
கட்டப்பட்டது2003
திறக்கப்பட்டது2003 (பழைய அரங்கு), 18 டிசம்பர் 2020
மீள்கட்டுமானம்2016–2020
வடிவமைப்பாளர்திட்ட வடிவமைப்பு[3]
திட்ட மேலாளர்கட்டிடக்கலை பொறியியல் கட்டட வடிவமைப்பு கட்டுமான மேலாண்மை நிறுவனம்
Main contractorsஅல்-பலாக் மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ
குடியிருப்போர்
அல்-ரய்யான் விளையாட்டுக் கழகம்

அகமது பின் அலி விளையாட்டரங்கம் (Ahmad bin Ali Stadium)[4][5] என்ற பல்நோக்கு விளையாட்டரங்கம் கத்தார் நாட்டின் அல்-ரய்யான் நகரத்தில் அமைந்துள்ளது. அல்-ரய்யான் விளையாட்டரங்கம் என்ற பெயரால் பிரபலமாக அறியப்படுகிறது. தற்போது கால்பந்து போட்டிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தவும் அகமது பின் அலி விளையாட்டரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டின் அல்-ரய்யான் நகரிலுள்ள அல்-ரய்யான் விளையாட்டுக் கழகம் மற்றும் அல்-காரிதியாத் நகரிலுள்ள அல்-காரிதியாத் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் தாயகமாக இந்த அரங்கம் திகழ்கிறது. 1960 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை கத்தாரின் அமீராக இருந்த அகமத் பின் அலி அல் தானியின் நினைவாக இந்த மைதானத்திற்கு அகமது பின் அலி விளையாட்டரங்கம் எனப் பெயரிடப்பட்டது.[6] 2003 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முன்னாள் அரங்கம், 21,282 பேர் அமரும் திறன் கொண்டதாகும். 2015 ஆம் ஆண்டில் இவ்வரங்கம் இடிக்கப்பட்டது.[7] புதியதாக கட்டப்பட்டுள்ள அல் ரய்யான் விளையாட்டரங்கம் 40,740 பேர் அமரும் திறன் கொண்டது.[8]

2022 உலகக் கோப்பை போட்டிக்கான விளையாட்டரங்குகள் கட்டுமானம்[தொகு]

பன்னாட்டுக் கால்பந்தாட்டக் கழகங்கள் கூட்டமைப்பின் உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில் 2022 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளன. இதற்காக எட்டு விளையாட்டரங்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் அகமது பின் அலி விளையாட்டரங்கமும் ஒன்றாகும்..[9][10]

புதிய அல் ரய்யான் விளையாட்டரங்கம் அமைப்பதற்காக முன்னாள் அகமது பின் அலி அரங்கம் 2015 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது.[11] விளையாட்டரங்கம் இடிக்கப்பட்டதால் விளைந்த 90 சதவீத இடிபாடுகள் புதிய அரங்கத்துக்காகவோ அல்லது பொதுக் கலைத் திட்டங்களுக்காகவோ மீண்டும் பயன்படுத்தப்படும் எனவும் திட்டமிடப்பட்டது.[12]

புதிய மைதானத்தின் கட்டுமானம் 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது.[13] அல்-பலாக் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இது மேற்கொள்ளப்பட்டது. உலகக் கோப்பைக்குப் பிறகு மைதானம் 21,000 இருக்கைகளாகக் குறைக்கப்படும்.[12] கத்தார் நாடு நடத்தும் 2022 உலகக் கோப்பைக்காக இப்புதிய மைதானம் கட்டப்பட்டது.

விளையாட்டுக் கணிப்புகள், செய்திகள், விளம்பரங்கள், விளையாட்டு அறிவிப்புகள், அப்போதைய போட்டித் தகவல் மற்றும் போட்டிகளுக்கான திரையாக விளையாட்டரங்கின் முன்புறச் சுவற்றில் ஒரு பெரிய திரை முகப்பு கட்டுவதும் கட்டுமான புதுப்பித்தலில் அடங்கும். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்காக அரங்கத்தின் இருக்கை திறன் 40,740 ஆக அதிகரிக்கப்பட்டது. அனைத்து இருக்கைகளும் நிழலிடப்பட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளன.[14]

புதிய அல்-ரய்யான் விளையாட்டரங்கத்தின் திறப்பு விழா 18 டிசம்பர் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று நடந்தது. இந்நாள் கத்தாரின் தேசிய நாளாகும். மேலும், சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு கத்தார் நாடு 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்துகிறது.[15] 2020 பிஃபா உலகக் கோப்பைக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு மைதானங்களில் இந்த மைதானமும் ஒன்றாகும்.[16][17]

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பிஃபா அரபு கோப்பை போட்டிகளின் போது இந்த மைதானம் நான்கு போட்டிகளை நடத்தியது[18]

2022 உலகக் கோப்பை கால்பந்து[தொகு]

அகமது பின் அலி விளையாட்டரங்கத்தில் 2022 உலகக் கோப்பையின் போது ஏழு போட்டிகள் நடைபெறுகின்றன.

நாள் நேரம் அணி. 1 முடிவு அணி. 2 சுற்று வருகை
21 நவம்பர் 2022 22:00  ஐக்கிய அமெரிக்கா  வேல்சு,  இசுக்காட்லாந்து, அல்லது  உக்ரைன் குழு பி
23 நவம்பர் 2022 22:00  பெல்ஜியம்  கனடா குழு பி
25 நவம்பர் 2022 13:00  வேல்சு,  இசுக்காட்லாந்து, or  உக்ரைன்  ஈரான் குழு பி
27 நவம்பர் 2022 13:00  சப்பான்  கோஸ்ட்டா ரிக்கா அல்லது  நியூசிலாந்து குழு பி
29 நவம்பர் 2022 22:00  இங்கிலாந்து  வேல்சு,  இசுக்காட்லாந்து, அல்லது  உக்ரைன் குழு பி
1 டிசம்பர் 2022 18:00  குரோவாசியா  பெல்ஜியம் குழு எப்
3 டிசம்பர் 2022 22:00 சி குழு வெற்றியாளர் டி குழு இரண்டாமிடம் 16 ஆவது சுற்று

மேற்கோள்கள்[தொகு]

 1. "Ahmed bin Ali Stadium, Qatar World Cup Stadium". footballarroyo.co.uk. 5 February 2022. 15 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Qatar 2022: Al-Rayyan Stadium turf installed in record time". 3 March 2020. 3 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Al-Rayyan Stadium". stadiumdb.com. 9 July 2015. 3 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Ahmad Bin Ali Stadium". Supreme Committee for Delivery & Legacy. 1 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Ahmad bin Ali Stadium". FIFA. 1 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Qatar inaugurates fourth stadium for the 2022 World Cup in Al Rayyan". Goal. 18 December 2020. 1 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
 7. "New stadium: Ahmad bin Ali Stadium, the desert dune". stadiumdb.com. 26 January 2021. 15 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Al Rayyan Stadium Qatar". onlineqatar.com. 13 May 2019. 8 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
 9. "2022 Qatar World Cup: Al Rayyan stadium achieves major sustainability rating". goal.com. 12 October 2020. 31 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Al Rayyan Stadium achieves prestigious sustainability ratings". thepeninsulaqatar.com. 11 October 2020. 8 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Ahmed bin Ali Stadium (Al-Rayyan Stadium) – until 2014". stadiumdb.com. 1 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
 12. 12.0 12.1 "Qatar Unveils Fifth World Cup Venue: Al Rayyan Stadium by Pattern Architects". archdaily.com. 23 April 2015. 5 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Qatar 2022: Al Rayyan Stadium sees first concrete pouring". StadiumDB. 17 October 2016. 30 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Construction: Al-Rayyan Stadium – StadiumDB.com". stadiumdb.com. 2 April 2019. 2 June 2019 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Al Rayyan stadium to open on Qatar National Day". Gulf Times. 3 December 2020. 9 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Education City and Ahmad Bin Ali stadiums to host FIFA Club World Cup 2020™". FIFA. 18 January 2021. https://www.fifa.com/clubworldcup/news/education-city-and-ahmad-bin-ali-stadiums-to-host-fifa-club-world-cup-2020tm. 
 17. "Doha all set to host 2020 FIFA Club World Cup". iloveqatar.net. 23 January 2021. 3 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
 18. "2021 FIFA Arab Cup: Participating teams, fixtures and all you need to know". goal.com. 18 December 2021. 15 February 2022 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]