அகமதுநகர் கோட்டை
அகமதுநகர் கோட்டை | |
---|---|
அகமத்நகர், மகாராட்டிரம், இந்தியா | |
![]() | |
ஆள்கூறுகள் | 19°05′41.3″N 74°45′19.7″E / 19.094806°N 74.755472°E |
வகை | நிலக் கோட்டை |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்தியத் தரைப்படை |
கட்டுப்படுத்துவது | அகமதுநகர் சுல்தானகம் (1562-1600)![]() ஐதராபாத் இராச்சியம் (1724-1759) மராட்டியப் பேரரசு (1759-1803) ஐக்கிய இராச்சியம்
|
மக்கள் அனுமதி |
நாள்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை |
நிலைமை | சேதமடைந்துள்ளது |
இட வரலாறு | |
கட்டிடப் பொருள் |
கல், சுண்ணாம்பு, மணல், களிமண் |
சண்டைகள்/போர்கள் | இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (1803-1805) |
காவற்படைத் தகவல் | |
தங்கியிருப்போர் | நானா பட்னாவீஸ், ஜவகர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத், வல்லபாய் பட்டேல் |
அகமத்நகர் கோட்டை (Ahmednagar Fort), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் அகமத்நகர் அருகில் நிலப்பரப்பில் கட்டப்பட்டது. முதலில் இக்கோட்டை 1562 முதல் 1600 வரை அகமதுநகர் சுல்தானகத்தின் தலைமையிடமாக விளங்கியது. 1803-1805களில் மராத்திய கூட்டமைப்பு மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் இக்கோட்டை கிழக்கிந்தியக் கம்பெனியிடம் சென்றது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இக்கோட்டை சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டது. தற்போது இக்கோட்டை இந்தியத் தரைப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வரலாறு
[தொகு]அகமதுநகர் சுல்தான் உசைன் நிஜாம் ஷா ஆட்சிக் காலத்தில் இக்கோட்டை 1562ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.[1]1600களில் இக்கோட்டை முகலாயர் வசம் சென்றது.[1][2][3][4] 3 மார்ச் 1707 அன்று தனது 88வது அகவையில் ஔரங்கசீப் அகமத்நகர் கோட்டையில் மரணமடைந்தார். பின்னர் 1724ல் இக்கோட்டை ஐதராபாத் நிசாம் வசம் சென்றது. பின்னர் 1756 முதல் 1803 வரை மராத்தியக் கூட்டமைப்பில் இருந்த சிந்தியா குலத்தினர் ஆண்ட குவாலியர் இராச்சிய மன்னர்களின் வசமானது. 1803-05களில் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் .இக்கோட்டை பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி வசம் சென்றது..[5]பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இக்கோட்டையை சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. இந்திய விடுதலை இயக்க வீரர்களான நானா பட்னாவீஸ், ஜவகர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத் மற்றும் வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் இக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் சிலராவர்[6][7] ஜவகர்லால் நேரு டிஸ்கவரி ஆப் இந்தியா எனும் நூலை இக்கோட்டைச் சிறையில் இருந்தபோது எழுதி முடித்தார்.[2][7][8].
தற்போது இந்தியத் தரைப்படையின் தரைப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டையை காலை 10 மணி முதல் மாலை 5 வரை பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
படக்காட்சிகள்
[தொகு]-
அகமத்நகர் கோட்டை
-
கோட்டையின் உட்புறக் காட்சி
-
கோட்டையின் உட்புற நுழைவாயில்
-
கோட்டை அகழியின் ஒரு பகுதி
-
ஜவகர்லால் நேரு சிறைக்கைதியாக அடைக்கப்பட்ட அறை (1942–1945)
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Cowley, Capt Cecil (1919). "IX". Tales of Ahmednagar. Bombay: Thacker and Company Ltd.
- ↑ 2.0 2.1 "Ahmednagar fort". Maharashtra Tourism Development Corporation. Retrieved 2009-03-10.
- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. p. 164. ISBN 978-9-38060-734-4.
- ↑ Mehta, Jaswant L. (1990). Advanced study in the history of medieval India. Sterling Publ. p. 271. ISBN 9788120710153. கணினி நூலகம் 633709290.
- ↑ Gazetteer of the Bombay Presidency. Govt. Central Press. 1884. p. 409. Retrieved 2009-03-10.
- ↑ Mufti, Amir (2007). "3". Enlightenment in the Colony. Princeton University Press. pp. 129–130. ISBN 978-0-691-05732-3. Retrieved 2009-03-10.
- ↑ 7.0 7.1 Gill, Himmat Singh (3 September 2006). "Where freedom held fort". The Sunday Tribune. http://www.tribuneindia.com/2006/20060903/spectrum/main5.htm.
- ↑ "Tribute in the thick of toil". The Telegraph-Calcutta. 15 August 2004 இம் மூலத்தில் இருந்து 4 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130204101225/http://www.telegraphindia.com/1040815/asp/frontpage/story_3628047.asp.