உள்ளடக்கத்துக்குச் செல்

அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதை
கண்ணோட்டம்
பூர்வீக பெயர்अहमदाबाद - मुंबई मुख्य लाइन , અમદાવાદ - મુંબઇ મુખ્ય લાઇન
நிலைசெயல்பாட்டில்
உரிமையாளர்இந்திய இரயில்வே
வட்டாரம்குஜராத், மகாராட்டிரம்
முனையங்கள்
சேவை
அமைப்புமின்மயமாக்கப்பட்டது
செய்குநர்(கள்)மேற்கு இரயில்வே (இந்தியா)
வரலாறு
திறக்கப்பட்டது20 சனவரி 1863
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்493 km (306 mi)
தண்டவாளங்களின் எண்ணிக்கை2
தட அளவிஅகலப் பாதை
மின்மயமாக்கல்ஆம்
இயக்க வேகம்மணிக்கு 160 கிலோ மீட்டர் வரை
வழி வரைபடம்
, அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதையின் வரைபடம்

அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதை (Ahmedabad–Mumbai main line),மேற்கு இந்தியாவில் செயல்படும் மேற்கு இரயில்வேயின் ஒரு இருப்புப்பாதை ஆகும். 493 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த முதன்மை இருப்புப் பாதையானது மும்பை நகரத்தையும், அகமதாபாத் நகரத்தையும் இணைக்கிறது. இந்த இருப்புப் பாதை முழுவதும் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்த முதன்மை இருப்புப் பாதையில் வதோதரா, பரூச், சூரத், அங்கலேஷ்வர், வாபி, பால்கர்,, மும்பை நகரங்கள் உள்ளது.

இதன் கிளை இருப்புப் பாதைகள்

[தொகு]

அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதையிலிருந்து கீழ்கண்ட கிளை இருப்புப் பாதைகள் பிரிகிறது.[1]

  1. நாடியாத்- மொதாசா இருப்புப் பாதை 104 கிலோ மீட்டர்
  2. காம்பத்-ஆனந்த் இருப்புப் பாதை - 53 கிலோ மீட்டர்
  3. கத்தானா-வசத் இருப்புப் பாதை - 43 கிலோ மீட்டர்
  4. வதோதரா- சோட்டா உதய்பூர் இருப்புப் பாதை - 105 கிலோ மீட்டர்
  5. தாகேஜ்- பரூச் இருப்புப் பாதை - 62 கிலோ மீட்டர்
  6. ராஜ்பிப்லா-அங்கலேஷ்வர் - இருப்புப் பாதை - 63 கிலோ மீட்டர் [2]

முக்கியத் தொடருந்துகள்

[தொகு]

அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதையில் செல்லும் முக்கியத் தொடருந்துகள்:

பெயர் வண்டி எண் துவங்குமிடம் முடியுமிடம்
மும்பை சென்டிரல் - காந்திநகர் வந்தே பாரத் விரைவுவண்டி 20901/02 மும்பை சென்டிரல் காந்திநகர்
அகமதாபாத்- மும்பை சென்டிரல் தேஜஸ் விரைவுத் தொடருந்து 82901/02 மும்பை சென்டிரல் அகமதாபாத்
மும்பை சென்டிரல் -அகமதாபாத் எக்ஸ்பிரஸ் 12009/10 மும்பை சென்டிரல் அகதாபாத்
குஜராத் எக்ஸ்பிரஸ் 22953/54 மும்பை சென்டிரல் அகமதாபாத்
கர்ணாவதி எக்ஸ்பிரஸ் 12933/34 மும்பை சென்டிரல் அகமதாபாத்
குஜராத் மெயில் 12901/02 மும்பை சென்டிரல் அகமதாபாத்
மும்பை சென்டிரல்- அகமதாபாத் பயணியர் வண்டி 59439/40 மும்பை சென்டிரல் அகமதாபாத்
மும்பை சென்டிரல்- அகமதாபாத் பயணியர் வண்டி 59441/42 மும்பை சென்டிரல் அகமதாபாத்
பறக்கும் ராணி 12921/22 மும்பை சென்டிரல் சூரத்
வதோதரா எக்ஸ்பிரஸ் 12927/28 மும்பை சென்டிரல் வதோதரா
மும்பை சென்டிரல்- வல்சாத் விரைவு பயணியர் வண்டி 59023/24 மும்பை சென்டிரல் வல்சாத்
லோக் சக்தி எக்ஸ்பிரஸ் 22927/28 மும்பை பாந்திரா முனையம் அகமதாபாத்
பாந்திரா முனையம்-வாபி பயணியர் வண்டி 59045/46 மும்பை பாந்திரா முனையம் வாபி/வல்சாத்
பாந்திரா முனையம்-சூரத் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் 12935/36 பாந்திரா முனையம் சூரத்
பிலாத்-வதோதரா அதிவிரைவு வண்டி 22929/30 பிலாத் வதோத்ரா
குஜராத் இராணி 19033/34 வல்சாத் அகமதாபாத்
வதோதரா-அகமதாபாத் இண்டர்சிட்டு எக்ஸ்பிரஸ் 19035/36 வதோதரா அகமதாபாத்
மும்பை சென்டிரல் - அகதாபாத் இரட்டை அடுக்கு எக்ஸ்பிரஸ் 12931/32 மும்பை சென்டிரல் அகமதாபாத்

மேற்கோள்கள்

[தொகு]
  1. irfca.org, Retrieved 13 Aug 2020
  2. irfca.org, Retrieved 13 Aug 2020