அகமதாபாது நகரத் தாலுகா
அகமதாபாது நகரம் | |
|---|---|
தாலுகா | |
அகமதாபாது மாவட்டத்தில் உள்ள அகமதாபாது நகரத் தாலுகா | |
| ஆள்கூறுகள்: 23°01′N 72°35′E / 23.017°N 72.583°E | |
| நாடு | |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | அகமதாபாது |
| தலைமையகம் | அகமதாபாது |
| அரசு | |
| • நிர்வாகம் | அகமதாபாது மாநகராட்சி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வம் | குஜராத்தி, இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| தொலைபேசிக் குறியீடு | +91-079 |
| வாகனப் பதிவு | GJ |
| மக்களவை (இந்தியா) | அகமதாபாது |
| நகர முகமை | அகமதாபாது மாநகராட்சி |
| இணையதளம் | gujaratindia |
அகமதாபாது நகரத் தாலுகா (Ahmedabad City taluka) என்பது, இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குசராத்து மாநிலத்தின் அகமதாபாது மாவட்டத்தில் இருந்த ஒரு முன்னாள் தாலுகாவாகும். சுமார் 2012-ஆம் ஆண்டு மார்ச் 19–20 தேதிகளில், இந்தத் தாலுகா அகமதாபாது நகரம் (கிழக்கு) மற்றும் அகமதாபாது நகரம் (மேற்கு) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.[1][2][3]
இந்தத் தாலுகாவில் அமைந்திருந்த பல கிராமங்கள் அகமதாபாது மாநகராட்சியின் கீழ் இணைக்கப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட இவ்விரு தாலுகாக்களின் தலைமையிடமும் அகமதாபாதே ஆகும். இவ்விரு தாலுகாக்களையும் பிரிக்கும் எல்லையாக சபர்மதி ஆறு கொள்ளப்பட்டது. அதாவது, சபர்மதி ஆற்றை இவ்விரு தாலுகாக்களுக்கும் இடையிலான எல்லையாகக் கொண்டு, ஆற்றின் கிழக்கே அமைந்த பகுதிகள் அகமதாபாது நகரம் (கிழக்கு) தாலுக்காவிலும், ஆற்றின் மேற்கே அமைந்த பகுதிகள் அகமதாபாது நகரம் (மேற்கு) தாலுகாவிலும் சேர்க்கப்பட்டன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "My Taluka". குஜராத் அரசு. Archived from the original on 1 April 2012. Retrieved 3 May 2012.
- ↑ 2.0 2.1 "Decision to divide Ahmedabad City Taluka". Ahmedabad: Gujarat Samachar. 20 March 2012. Archived from the original on 2015-12-17. Retrieved 7 May 2012.
- ↑ VTV - AHMEDABAD CITY TALUKA DIVISION FOR ADMINISTRATIVE CONVENIENCE - AHMEDABAD [The newly established Ahmedabad City East Office was inaugurated today by the Revenue Minister.] (audio-visual). VTV (VTV-Gujarati Gaurav). 27 April 2012. LM2OuY65T2A. Archived from the original on 2015-12-17. Retrieved 17 December 2015.