அகப்பொருள் தலைவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகப்பொருள் மாந்தர்களில் ஒருவராக வரும் தலைவியைத் தலைமகள், கிழத்தி, கிழவோள் மனையோள் [1] என்றெல்லாம் குறிப்பிடுவர். இவள் காதல் வாழ்க்கையில் காதலியாகவும், மனைவியாகவும் வெளிப்படுவாள்.

  • அவனுக்கு அவள், அவளுக்கு அவன் என உரிமை உண்டாவதைக் கிழவன், கிழத்தி என்னும் சொற்களால் குறிப்பிடுவர். (கிழமை = உரிமை)

உடலுறவு உரிமை வாழ்க்கையில் இவளுக்கு உள்ள பங்கைத் தொல்காப்பியம் தொகுத்தும் விரித்தும் காட்டுகிறது. இவற்றால் தமிழரின் வாழ்க்கைப் பாங்கை உணரமுடியும்.

காதல் வாழ்க்கையில் [2][தொகு]

காதல் வாழ்க்கையில் தலைவியின் பங்கும், உரையாடல்களும் நிகழும் சூழல்கள் இப்பகுதியில் தொகுத்துக் காட்டப்படுகின்றன.

தலைவன் வருகையில் பகற்குறியும், இரவுக்குறியும் பிழைபட்டபோது
அவன் வாராதபோது அவளுக்குப் பொழுது போகாமை
குறியிடத்தைப் பார்க்கும்போதெல்லாம்
திடீரென அவன் வீட்டுக்கே வந்துவிட்டால் அவனுக்கு உதவுதல்
பெருந்தடைகளைக் கடந்து அவன் வரும்போது
அவள் கூடிய பின்னர் நாணத்தொடு அவனை அனுப்பும்போது
திருமணத்துக்குப் பின் உறவு என்று தோழி தடுக்கும்போது
பெற்றோர் திருமணத்துக்கு உடன்பட்டபோதும், மறுத்தபோதும்

தலைவியின் கூற்று நிகழும்.

கற்பு வாழ்க்கையில் [3][தொகு]

கற்புக் காலத்தில் தலைவியின் பங்கும், உரையாடுதலும் பற்றித் தொகுத்துரைக்கப்படும் செய்திகள்:

உரிமை தந்த தலைவனின் அன்பைப் பாராட்டுதல்
தலைவன் பிரிந்த காலத்தில் நோதல்
குளத்தில் பிற மகளிருடன் நீராடியவனிடம் ஊடல்
ஈன்றணிமைக் காலத்தில் தலைவன் புதியவளை நாடித் திரும்பியபோது ஊடல்
கெஞ்சும் தலைவனை அவளிடம் கெஞ்சு எனல்
அவளிடம் செல் எனத் திட்டுதல்
காமக்கிழத்தி தன் மகனைத் தழுவி விளையாடும்போது மகனைத் திட்டுதல்.
இந்த விளையாட்டுக் கண்டுகொள்ளாமல் செல்லல்
தந்தையை ஒப்பர் மகன் என்று குழந்தையைப் பழித்தல்.
அவன் விலகியிருந்த கொடுமையை எண்ணித் தானும் தற்காலிகமாக விலகி நிற்றல்.
தன் காலடியில் வணங்கிய தலைவனை அந்தப் பெண்கள் இதனைக் காணவேண்டும் எனல்.
அணி செய்வித்த தன் மகனை அவனது பரத்தை தூக்கும்போது நோதல்
பரத்தை சூள் உரைத்ததைப் பற்றிக் கடிதல்
தோழி தலைவன் பக்கம் பேசும்போது எதிர்த்துப் பேசுதல்.

இப்படித் தலைவி காய்ந்தும் (சினந்தும்), உவந்தும் (மகிழ்ந்தும்), பிரிந்தும் (ஊடியும்), பெட்டும் (விரும்பியும்) பேசுவாள்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. தொல்காப்பியம் கற்பியல் 10
  2. தொல்காப்பியம் களவியல் 17
  3. தொல்காப்பியம் கற்பியல் 6

காண்க[தொகு]

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகப்பொருள்_தலைவி&oldid=3229772" இருந்து மீள்விக்கப்பட்டது