அகனேசு பியெங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகனேசு பியெங்கா (Agnès Fienga) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் இந்திசுத்தியூத் தெ மெக்கானிக் செலெசுத்தெ எத் தெ கேல்குல் தெசு எப்பிமெரிடெசு எனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இவர் கோளிருப்பு நாட்காட்டி உருவாக்கப் புலத்தில் முனைவாகச் செயட்படுகிறார். இவர் பன்னாட்டு வானியல் ஒன்றிய உறுப்பினர். இவர் முனைவர் ஈ. மிலேசு சுட்டேண்டிசு அவர்களுடன் இணைந்து சிறுகோள்கள் ஆய்வில் ஈடுபட்டு, கோள் வட்டணை இயக்கத்தில் அவற்றின் தாக்கம்பற்ரி விரிவாக ஆய்வு செய்துள்ளார்.[1] இவர் கோளியக்கத்தால் புவி ஈர்ப்புக் கோட்பாட்டை சரிபார்த்தலிலும் ஆர்வம் கொண்டுள்ளார்.[2] அண்மையில் இவர் காசினி திட்டத் தரவுகளை ஆய்வு செய்து எலனா பித்யேவா நோக்கீடுகளை வைத்து உருவாக்கிய காரிக்கோளின் வட்டணையில் உள்ள பிறழ்வைக் கண்டுபிடித்தார்.

நாசாவின் தரவுப்படி, அகனேசு பியெங்காவின் அறிதிறச் சுட்டு (h-index) 9 ஆகும். தன்மேற்கோள்கள் தவிர்த்த இவரது ஆய்வைச் சுட்டும் மேற்கோள்கள் 208 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pdf
  2. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2011-07-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-12-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகனேசு_பியெங்கா&oldid=2481117" இருந்து மீள்விக்கப்பட்டது