அகனேசு ஆக்கர்
அகனேசு ஆக்கர் Agnès Acker | |
---|---|
பிறப்பு | 28 சனவரி 1940 செந்தீம், கவுத்ரின்,, பிரான்சு |
தேசியம் | பிரான்சு |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | இசுட்டிராசுபர்கு பலகலைக்கழகம் இசுட்டிராசுபர்கு வான்காணகம் |
கல்வி கற்ற இடங்கள் | இசுட்டிராசுபர்கு பலகலைக்கழகம் |
விருதுகள் | Ordre des Palmes académiques ஆணையர் (1999) Legion of Honour செவாலியே விருது (2012) |
அகனேசு ஆக்கர் (Agnès Acker) (பிறப்பு: 28 பிப்ரவரி 1940) ஒரு பிரெஞ்சு வானியற்பியலாளர் ஆவார். இவர் இசுட்டிராசுபர்கு பலகலைக்கழகத் தகவுறு பேராசிரியரும் இசுட்டிராசுபர்கு கோளரங்கத்தை நிறுவியவரும் பிரெஞ்சு பேசும் கோளரங்குக் கழக நிறுவனத் தலைவரும் ஆவார்ரிவரது ஆய்வு சூரியவகை விண்மீன் படிமலர்ச்சியின் இறுதிக் கட்டங்களில் குறிப்பாக கோளாக்க ஒண்முகில், அணுக்கருவின் இருமைத் தனமை, உடுக்கணக் காற்றுகள் ஆகியவற்றில் குவிந்துள்ளது.[1]
வாழ்க்கை
[தொகு]இவர் 1976 இல் இசுட்டிராசுபர்கு பலகலைக்கழகத்தில் Cinématique, âge et binarité des noyaux de nébuleuses planétaires எனும் ஆய்வுத் தலைப்பில் அரசுசார் முனைவர் பட்ட்த்தைப் பெற்றார்.[2]
இவர் இசுட்டிராசுபர்கு கோளரங்கத்தை நிறுவி 22 ஆண்டுகள் (1979-2001) அதன் தலைவராக விளங்கினார் [3] இவர் பிரெஞ்சுபேசும் கோளரங்குக் கழகத்தை நிறுவி அதன் தலைமையை 26 ஆண்டுகள் (1984-2010) வரை ஏற்றார்.[1] இவர் விண்மீந்திரள் (உடுக்கணங்கள்) ஆய்வுக்குழுவுக்குப் பத்தாண்டுகள் (1987-1997), பொறுப்பு வகித்தார். அப்போது இவர் வானியற்பியலிலரிசுட்டிராசு வான்காணகத்தில் இருந்து உயர்நிலை ஆய்வு பட்டயத்தைப் பெற்றார். இந்த வான்காணகத்துக்கு இவர் பன்னிரண்டு ஆண்டுகள் (1991-2002) இயக்குநரக விளங்கினார்.[3]
பல்கலைக்கழகப் பேராசிரியரான இவர் 2003 இல் சிறப்புநிலைக்கும் பிறகு 2009 இல் தகைமைநிலைக்கும் தெர்வு செய்யப்பட்டார்[3].
ஆக்கர் பல நிறுவனங்களில் உயரிய பொறுப்புகளை ஏற்றிருந்தார்[4] இவர் பன்னாட்டு வானியல் ஆண்டுக்கான தேசிய முடுக்கக் குழு உறுப்பினர் ஆவார்.மிவர் BEATEP அமைப்பின் நிறுவனரும் துணைத்தலைவரும், 1976 முதல் பன்னாட்டு வானியல் ஒன்றிய உறுப்பினரும், 1990 முதல் பன்னாட்டுக் கோளரங்கக் கழகத்தின் குழும உறுப்பினரும், member of the Scientific and Pedagogical Council of Le Vaisseau மன்றத்தின் அறிவியல், கல்வியியல் உறுப்பினரும் 2004 முதல் 2009 வரையில் இசுட்டிராபர்கின் CCSTI உறுப்பினரும் ஆவார். இவர் 1990 முதல் ஆசிரியர்-வானியலாளர் அறிவுறை மன்ற (CLEA) உறுப்பினரும் 1991 முதல் 1994 வரை உலூயிசு பசுட்டியர் பல்கலைக்கழகத்தின் CCSTI அமைப்பின் அறிவியல் தோட்ட இயக்குநரும் ஆவார். இவர் 1987 முதல் 1991 வரை பல்கலைக்கழகங்களின் தேசிய மன்றத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் 1995 முதல் 2001 வரை அல்சாசு வட்டாரப் பொருளியல், சமூகவியல் மன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
கோளரங்கத் துறையில்[3] ஆக்கர் பல ஐரோப்பியக் கோளரங்க்க் கண்காட்சிகளில் திட்ட மேலாளராக APLF / ESO சார்பாக இருந்துள்ளார். இவற்றுள் Les mystères du ciel austral (2002), ALMA : la quête de nos origines cosmiques (2009), L'eau : une aventure cosmique (2012) ஆகியன அடங்கும். 1962 முதல் 1982 வரையிலும் 2008 இலும் இவர் பன்னிரண்டு கோளரங்கக் கண்காட்சிகளுக்கு இவர் ஆசிரியராக உரையெழுதியுள்ளார். இவர் 2005 இல் மும்மொழி பதிப்புகளைப் படிக்கவியலும் குறுவட்டுகளில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் உருவாக்கிய புடவித் தேடல் ( புடவிசார் நேரடிப் பயிற்சி ) எனும் திட்டத்தை உருவாக்கினார்.[5] இவர் 1995இல் இருந்து கோளரங்கங்கள் (Planétariums) இதழின் இயக்குநராகவிருந்து வெளியிட்டார்.[6] இவர் இசுட்டிராசுபர்கு வான்காணகத்தின் கோளரங்கங்கள் (Planétariums) திரட்டுப் பணியை நிறுவி (1984) அதன் இயக்குநரகப் பணியாற்றினார். கெல்லர் எனப்படும் ஆக்கர் திருமணமானவர்; இவருக்கு ஐந்து குழந்தையர் உண்டு.[7] இவர் உந்தூர்தி விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். இவர் கோண்டா CB600F (கார்னெட் 600) (95 CV) உந்தூர்தியில் பயணம் செய்கிறார்.[3]
தேர்ந்தெடுத்த வெளியீடுகள்
[தொகு]ஆக்கர் தனித்தும் பிறருடன் இணைந்து 200 க்கும் மேற்பட்ட வானியற்பியல் ஆய்வுக் கட்டுரைகளை பன்னாட்டு ஆராய்ச்சி இதழ்களில் வெளியிட்டுள்ளார்[4] and many educational and scientific publications.
- வானியல் பயில்வோம் (Initiation à l'astronomie), மாசன் குழுமம் 1978, 1981, 1986
- வானியல், வானியற்பியலுக்கான அறிமுகம், துனோது குழுமம், 1992, 1995, 1998, 2005, 2013
- Formes et couleurs dans l'univers : nébuleuses, amas d'étoiles, galaxie, மாசன் குழுமம், 1987
- Le planétarium : un spectacle nouveau dans votre ville, வால்புளோர் குழுமம், 1991
- Astronomie : méthodes et calculs : exercices corrigés ( கார்லோசு யாசுசெக்கு உடன் இணைந்து), மாசன் குழுமம், 1984, 1995
- Vie et mort des étoiles : un exposé pour comprendre, un essai pour réfléchir (அரியான் இலாங்கன் உடன் இணைந்து), டொமினோசு திரட்டு இலக்கியம் (பிளம்மாரியன் உடன் இணைந்து), 1998
- L'univers astronomique (ழீன் கிளாடே பெக்கர் உடன் இணைந்து), இசுட்டிராசுபர்கு நோக்கீடுகள், 2001, 2006
- Étoiles et matière interstellaire (ஜேம்சு இலெக்கியூக்சு, கிளாடே பெர்த்தவுட், ழீன் பால் ழான், நிக்கோலசு பிரஞோசு, ழீன் பியேர் இலாசோத்தா ஆகியோர் உடன் இணைந்து), எலிப்செசு குழுமம், 2008, 2009
- L’Arc-en-ciel des étoiles (dir.), APLF/இசுட்டிராசுபர்கு நோக்கீடுகள், 2010 (கல்விச் சிறுநூல்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Université Nice Sophia Antipolis [1] பரணிடப்பட்டது 2013-10-29 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Catalogue SUDOC [2]
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Fond'Action Alsace". Archived from the original on 2019-02-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.
- ↑ 4.0 4.1 Observatory of Strasbourg [3]
- ↑ "Présentation du CD-ROM sur le site de l'APLF" (PDF). Archived from the original (PDF) on 2017-03-19. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.
- ↑ Sommaires de la revue Planétariums depuis 1995 sur le site de l'APLF [4] பரணிடப்பட்டது 2019-07-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Geneviève Daune-Anglard, « La bonne étoile d'Agnès Acker »], in L'Alsace, 8 mars 2011 [5]