அகத்தோன்றல் (உயிரியல்)
அகத்தோன்றல் (Endogenous) என்பது ஒரு பொருள் அல்லது செயல்முறை ஒரு உயிரினத்தின் உள்ளிருந்தே அல்லது அவ்வுயிரினத்தின் திசுவில் இருந்தே அல்லது உயிரினத்தின் செல்லில் இருந்தே தோன்றுவதைக் குறிக்கும்.[1]
அகத்தோன்றல் வைரசுப் பொருட்கள் என்பவை டி.என்.ஏ வரிசைப்பொருட்களைக் குறிக்கிறது. இவ்வரிசைப் பொருட்கள் வம்ச பரம்பரையாக மரபணுத் தொகுதிக்குள் உள்ள கரு அணுக்களால் செலுத்தப்படுகின்றன. இவ்வரிசைப் பொருட்கள் வைரசுகளின் துகள்களாகவோ அல்லது முழு வைரசின் மரபணுத் தொகுதிகளாகவோ (முந்தைய வைரசு) ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு செலுத்தப்பட்டு ஓம்புயிர் மாற்றுருவாகச் செயல்படுகின்றன.
மூப்படைதல், மாதவிலக்குச் சுழற்சி மற்றும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பருவநிலை மாறுபாடுகள் ஆகியனவும் அகத்தோன்றல் செயல்முறைகளில் அடங்கும்.
சில உயிரியல் அமைப்புகளில் பொதுவாக நிலைக்கருவிலி உயிரினங்களில் அகத்தோன்றல் என்பது டி.என்.ஏ வை பெற்றுக் கொள்பவர்களைக் குறிக்கிறது. எனினும், ஒருசீர்த்திடநிலை காரணமாக அக மற்றும் புறச்சூழல் தாக்கங்களைப் பகுத்தறிவது பெரும்பாலும் கடினமாகும்.
செல்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் அகத்தோன்றல் படியெடுத்தல் காரணிகளை படியாக்கப்பட்ட மரபணுவாக உருவாக்குவது எதிர்க்கப்படுகிறது.
சொற்பிறப்பியல்
[தொகு]பண்டைய கிரேக்க மொழியில் endogenous என்றால் அகம் + தோன்றல் என்பதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Endogenous | Define Endogenous at Dictionary.com". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2011-07-11.
இவற்றையும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- அகத்தோன்றல் (உயிரியல்) – விளக்கம்