அகத்தியமலை புதர் தவளை
அகத்தியமலை புதர் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | ரோர்செசுடசு
|
இனம்: | ரோ. அகச்தெயென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
ரோர்செசுடசு அகச்தெயென்சிசு சக்காரியா மற்றும் பலர், 2011 |
அகத்தியமலை புதர் தவளை் (Raorchestes agasthyaensis-ரோர்செசுடசு அகச்தெயென்சிசு) என்பது இந்தியாவின் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், குறிப்பாக பொன்முடி மலைக்கு அருகிலுள்ள போனாக்காடு மற்றும் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களின் அருகிலுள்ள பகுதிகளில் காணப்படும் தவளை சிற்றினம் ஆகும்.[2][3] அகத்தியமலையில் இதன் வாழிட வகையின் பெயரால் சிற்றினம் பெயரிடப்பட்டது.
விளக்கம்
[தொகு]முதிர்ச்சியடைந்த தவளையின் உடல் நீளம் 18.04 முதல் 21.48 மி.மீ. தலை அகலம் தலை நீளத்தை விட பெரியது. மூக்கு கூர்மையானது, கண் நீளத்திற்குச் சமமான துணை; செவிப்பறை தனித்துவமானது. முன்கை, கையை விட சிறியது. பக்கவாட்டு தோல் விளிம்பு இல்லை. தொடை நீளத்திற்குச் சமமான கீழ்க்காலெலும்புடையது. கை மற்றும் கால்களில் முக்கியமாகக் காணப்படும் துணை எலும்பு முடிச்சு சிறியது; வட்டு நன்கு வளர்ந்த மற்றும் தனித்துவமானது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ IUCN SSC Amphibian Specialist Group (2022). "Raorchestes ponmudi". IUCN Red List of Threatened Species 2022: e.T58916A166108423. https://www.iucnredlist.org/species/58916/166108423. பார்த்த நாள்: 26 December 2022.
- ↑ "Raorchestes agasthyaensis". India Biodiversity Portal. பார்க்கப்பட்ட நாள் 26 September 2014.
- ↑ Frost, Darrel R. (2014). "Raorchestes agasthyaensis Zachariah, Dinesh, Kunhikrishnan, Das, Raju, Radhakrishnan, Palot & Kalesh, 2011". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 26 September 2014.
- ↑ K. Deuti, Zoological Survey of India in Venkataraman, K., Chattopadhyay, A. and Subramanian, K.A. (editors). 2013. Endemic Animals of India(vertebrates): 1–235+26 Plates. (Published by the director, Zoological Survey of india, Kolkata)
வெளி இணைப்புகள்
[தொகு]- Data related to Raorchestes agasthyaensis at Wikispecies