அகத்தியத்தாபனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகத்தியத்தாபனம் என்பது ஈழத்தின் திருகோணமலையில் கரசையம்பதி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும்.

இத்தலத்தில் அகத்தியர் தாபித்த சிவலிங்கம் அமைந்த கோயில் ஒன்றின் வரலாறு திருக்கரசைப் புராணம் என்னும் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. அகத்தியத்தாபனத்தில் அமைந்த சிவாலயம் தலபுராணம் பெற்ற சிறப்புடையதாதலால் ஒரு காலத்தில் இத்தலம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

புராணம் பெற்ற சிவாலயம் அமைந்த இடத்திலே பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட புனிதச் சின்னங்களான லிங்கம், கோமுகை, நந்தி, பலிபீடம், வாயிற்கற்கள், தூண்கள் முதலானவற்றை ஒன்று சேர்த்து சிறிய கோயில் ஒன்று கட்டி இவ்வூரார் போற்றி வருகின்றனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்தியத்தாபனம்&oldid=2266434" இருந்து மீள்விக்கப்பட்டது