அகதப்பாடி லட்சுமி நாராயணசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு லட்சுமி நாராயணசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தர்மபுரி
அமைவிடம்:அரசினர் உயர் நிலைஙபபள்ளி அருகில், பெண்ணாகரம் ரோடு, அகதப்பாடி, தர்மபுரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தர்மபுரி
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
மூலவர்:லட்சுமி நாராயணசுவாமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அகதப்பாடி லட்சுமி நாராயணசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், அகதப்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

அமைவிடம்[தொகு]

இக்கோயிலானது தர்மபுரியில் இருந்து ஓகேனக்கல் செல்லும் வழியில் 7 கி,மீ தொலைவில் உள்ளது. கோயில் நடை காலை 6.30 முதல் 1.15 வரையிலும், மாலை 4 முதல் 8 வரை திறந்துள்ளது.

படவரிசை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]