அகண்ட சீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகண்ட சீனாவின் நவீன வடிவம் மஞ்சள் நிறத்தில்     

அகண்ட சீனா (ஆங்கிலத்தில்: Greater China) அல்லது அகண்ட சீன பிராந்தியம் என்றழைக்கப்படும் சொல் சீனாவின் நிலப்பகுதி, ஹாங்காங், தாய்வான், மக்காவு ஆகியவற்றை ஒரே பகுதியாகக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும். தற்போது இந்தச் சொற்றொடருக்குத் துல்லியமான அர்த்தம் முற்றிலும் தெளிவாக எதுவுமில்லை என்றபொழுதும், மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் பயன்படுத்துகின்றனர்.[1] இந்த வார்த்தை பொதுவாக அரசியல் ரீதியாக குறிக்கப்படுவதில்லை, மாறாக பல்வேறு பூகோளப் பகுதிகள் இடையேயுள்ள பொதுவான தொடர்புகளை, உதாரணமாக சீன மொழியில் வெளிவரும் தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் இசை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றின் மூலம் "அகண்ட சீனாவிற்கிடையேயுள்ள" கலாச்சார தொடர்புகளை குறிக்கப் பயன்படுகிறது.[2][3] மேலும் இந்த வார்த்தை பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில், அகண்ட சீனா பிராந்தியத்துடன் "கவனமையம் தைவான்"(Focus Taiwan) என ஒருங்கிணைந்து அறிக்கையளிக்கிறது.[4] இந்த சொற்றோடர் பூகோள ரீதியாக குறிப்பதில் வேறுபடலாம்.

அகண்ட சீனா என்ற சொற்றோடர் பொதுவாக ஒத்த பிரதேசங்களுக்கிடையேயுள்ள கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளையே குறிக்கிறது, மாறாக அரசுரிமையைக் குறிப்பதில்லை. அரசியல் உட்கருத்துக்களை தவிர்க்கும் வண்ணம், "அகண்ட சீனா" என்ற சொற்றோடருக்கு பதிலாக "சீனமொழி-பேசும் உலகம்" அல்லது "சீனோபோன் உலகம்" என்ற சொற்றோடர்கள் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

1944ல் வெளிவந்த அமெரிக்க பிரச்சாரப் படம் "சீனா போரில்" குறிப்பிடப்பட சீன வரைபடம் 'முறையான சீனாவை' மங்கோலியா, மஞ்சுரியா, திபெத் மற்றும் சிஞ்சியாங் பகுதிகளிலிருந்து வேறுபடுத்துகிறது.

1930-ல் ஜார்ஜ் கெரஸ்சி, சீன பேரரசுவைக் குறிக்க முறையான சீனாவிற்கு பதிலாக அகண்ட சீனா என்ற சொற்றோடரைப் பயன்படுத்தினார்..[5] 1970களின் பிற்பகுதியில் 'மெயின் லேண்ட் சீனா' மற்றும் 'ஹாங்காங்' இடையே அதிகரித்துவரும் வணிகத் தொடர்புகள் மட்டுமின்றி தைவானுடன் அதிகரிக்கவிருக்கும் வாய்ப்புகளினால், 1979ல் தைவான் பத்திரிக்கை 'சாங்கியோ'வில் முதலில் இந்த சொற்றோடர் மேற்கோள்காட்டப்பட்டது.[5] 1980களில் இந்த சொற்றோடர் இந்த பிராந்தியங்களுக்கிடையே வளர்ந்துவரும் பொருளாதார உறவுகளை மட்டுமின்றி அரசியல் ஒருங்கிணைப்பின் சாத்தியக்கூறுகளையும் குறிக்கப் புதுப்பிக்கப்பட்டது. இது ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஆசியான் அமைப்புகளைப் போன்று நிறுவனமயமாக்கப்படவில்லை. பொருளாதார ரீதியாக சில சந்தைகளை பொதுமைப்படுத்தும் இந்த கருத்தாக்கம் அரசியல் ரீதியாக குறிப்பதாக அர்த்தப்படாது.

நிதிப் பயன்பாடு[தொகு]

நிதிச் சூழலில், பல கிரேட்டர் சீனா பங்குகள் உள்ளன. உதாரணமாக, 'ஐஎன்ஜி கிரேட்டர் சீனா பங்கு'-தனில் 80சதவீத சொத்துக்கள் கிரேட்டர் சீனா என்றழைக்கப்படும் மெயின்லேண்ட் சீனா, ஹாங்காங் மற்றும் தைவானில் முதலீடு செய்துள்ளது.[6] அதேபோன்று டிரைபஸ் கிரேட்டர் சீன பங்குகள்' கிரேட்டர் சீனா என்றழைக்கப்படும் பகுதிகளான மெயின்லேண்ட் சீனா, ஹாங்காங் மற்றும் தைவானில் சொத்துக்கள் மற்றும் வணிகங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.[7] கிரேட்டர் சீனாவை உள்ளடக்கிய சொத்துக்களில் முதலீடு செய்திருந்த 'ஹெச்பிசி கிரேட்டர் சீனா பங்குகள்', 2009க்கு பிறகு தைவான் பிராந்திய சொத்துக்களை கைவிட்டபின்பு 'ஹெச்பிசி சீனா பிராந்திய பங்குகள்' எனப் பெயரிடப்பட்டது..[8][9] இப்படி எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.

இந்தியாவுடன் முரண்பாடு[தொகு]

மேற்கே அக்சாய் சின் என்றழைக்கப்படும் இந்தியாவின் லடாய் பிராந்தியத்தின் ஒரு பகுதி சீனாவின் சிஞ்சியாங் பிராந்தியத்தின் தன்னாட்சி பகுதியாக சீனாவால் நிர்வகிக்கப்படுகிறது. மற்றுமொரு சர்ச்சைக்குள்ள பகுதி மெக் மோகன் எல்லைக்கு தென்புறமுள்ள அருணாச்சலப் பிரதேசம் பகுதியை சீனா தனது என்று உரிமை கோருகிறது. 1975ல் இந்தியாவின் வரைபடத்தில் குறிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்தினை சீனா ஏற்கவில்லை, பின்பு இது 2003ல் இந்திய-சீன குறிப்பாணையில் ஏற்கப்பட்டது. [10] சீன வெளியறவுத் துறை தனது பிராந்தியந்துக்குட்பட்ட பகுதிகளிலிருந்து சிக்கிமை நீக்கியது.[10]

சான்றுகள்[தொகு]

  1. "Apple overtakes Lenovo in China sales". Financial Times. 18 August 2011. 19 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. MTV Channels In Southeast Asia and Greater China To Exclusively Air The Youth Inaugural Ball பரணிடப்பட்டது 2009-05-22 at the வந்தவழி இயந்திரம் - MTV Asia
  3. June 1, 2008, Universal Music Group realigns presence in Greater China[தொடர்பிழந்த இணைப்பு], Television Asia (Article archive at Newser)
  4. http://focustaiwan.tw/news/aeco/201404020006.aspx
  5. 5.0 5.1 Harding, Harry (Dec 1993). "The Concept of 'Greater China': Themes, Variations and Reservations". The China Quarterly (136, Special Issue: Greater China): 660. 
  6. "Prospectus - ING Global and International Equity and Fixed-Income Funds - Class A, B,". ING Funds. 2009-02-27. 2009-09-03 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Dreyfus Greater China Fund (prospectus)" (PDF). Dreyfus Corporation. 2009-03-01. 2009-09-03 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "HSBC Chinese Equity Fund (Factsheet)" (PDF). HSBC Global Asset Management (UK). 2005-12-15. 2009-06-30 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. Langston, Rob (2009-02-23). "HSBC announces changes to Greater China fund". FT Advisor. Archived from the original on 2011-07-11. https://web.archive.org/web/20110711045527/http://www.ftadviser.com/InvestmentAdviser/Investments/AssetClass/Equities/Growth/News/article/20090223/380253ec-fe75-11dd-ac57-00144f2af8e8/HSBC-announces-changes-to-Greater-China-fund.jsp. பார்த்த நாள்: 2009-06-30. 
  10. 10.0 10.1 D. S. Rajan, "China: An internal Account of Startling Inside Story of Sino-Indian Border Talks", South Asia Analysis Group, 10-June-2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகண்ட_சீனா&oldid=3657691" இருந்து மீள்விக்கப்பட்டது