உள்ளடக்கத்துக்குச் செல்

அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள்
Infrared Astronomical Satellite (IRAS)(அ,சி.வா.செ)
IRAS beside some of its all-sky images
அ,சி.வா.செ தவிர அதன் அனைத்து விண்வெளிப் படங்கள்
பொதுத் தகவல்கள்
நிறுவனம்நாசா / வி.தி.நெ.நி / அ.பொ.ஆ.ம
முதன்மை ஒப்பந்தகாரர் பால் விண்வெளி / போக்கர் விண்வெளி / ஆலன்ட்செ சிக்னால்
ஏவிய தேதி 25 சனவரி 1983[1]
ஏவுதளம் வான்டென்பெர்க் வி.ஏ.வ-2
ஏவுகலம் டெல்டா 3910
திட்டக் காலம் 10 மாதங்கள்
திணிவு1083 கிலோகிராம்
சுற்றுப்பாதை வகை சூரிய-ஒத்தியங்கு துருவ சுற்றுப்பாதை
சுற்றுப்பாதை உயரம் 900 கி.மீ
சுற்றுக் காலம் 100 நிமிடங்கள்
அமைவிடம்சுற்றுப்பாதையில், செயலிழத்தல்
தொலைநோக்கி வகை ரிட்செய்-செர்டியன்
அலைநீளம்நீள- தொலைதூர அலைநீளம் அகச்சிவப்பு
விட்டம்0.57 மீ
பெறும் பரப்பு 0.202 மீ2[2]
குவியத் தூரம் 5.5 மீ, f/9.6
கருவிகள்
Main array 62 கண்டறிவிகள்
Low Resolution Spectrometer (LRS) 8 to 22 µm பிளவற்ற நிறமாலை
Chopped Photometric Channel (CPC) தாழ்-தர வரைபடம் எழுதுதல்
இணையத்தளம்
IRAS

அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள் ( Infrared Astronomical Satellite) என்பது முதன்முதலில் விண்வெளி அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு விண்வெளி ஆய்வு மையமாகும். ஆங்கிலத்தில் இதைச் சுருக்கமாக IRAS என்றும் தமிழில் சுருக்கமாக அ.சி.வா.செ என்றும் அழைப்பர். முழுவானத்தையும் அகச்சிவப்பு அலைநீளங்களில் ஆய்வு மேற்கொள்ள இச்செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது[3].

1983 ஆம் ஆண்டு சனவரி 25 இல்[1] இத்திட்டம் தொடங்கப்பட்டது. இச்செயற்கைக்கோளின் பணி 10 மாதங்களுக்கு நீடித்தது. இதன் தொலைநோக்கியை அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகள் இணைந்து உருவாக்கியிருந்தன. 12, 25, 60 மற்றும் 100 மைக்ரோ மீட்டர் அலை நீளங்களில் 250000 க்கும் மேற்பட்ட அகச்சிவப்பு மூலங்கள் காணப்பட்டன

கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திலுள்ள அகச்சிவப்பு செயலாக்க மற்றும் ஆய்வுமையம் அகச்சிவப்பு வானவியல் செயற்கைக் கோளிடமிருந்து பெறப்படும் தரவுகளை ஆய்வுசெய்து உதவியது. தற்பொழுது, அகச்சிவப்பு செயலாக்க மற்றும் ஆய்வுமையத்தின் அகச்சிவப்பு அறிவியல் காப்பகம் இந்த அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள் காப்பகத்தைக் கொண்டுள்ளது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Infrared Astronomical Satellite
என்பதில் ஊடகங்கள் உள்ளன.