அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா

ஆள்கூறுகள்: 7°46′58″S 110°23′47″E / 7.7827°S 110.3963°E / -7.7827; 110.3963
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Affandi Museum
Affandi's car and bike on display at his museum
அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா is located in சாவகம்
அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா
ஜாவாவில் அமைவிடம்
அமைவிடம்யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி, இந்தோனேசியா
ஆள்கூற்று7°46′58″S 110°23′47″E / 7.7827°S 110.3963°E / -7.7827; 110.3963
வகைகலை அருங்காட்சியகம்
வருனர்களின் எண்ணிக்கை17,919 (2010)[1]
வலைத்தளம்www.affandi.org

அஃபாண்டி அருங்காட்சியகம் (Affandi Museum) இந்தோனேஷியாவில் ஜாவாவில் யோகியகார்த்தா என்னுமிடத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.

கஜா வோங் ஆற்றின் கரையின்மீது அமைந்துள்ள, சோலோ தெருவில் உள்ள ஒரு இடத்தில் ஓவியர் அஃபாண்டி தனக்காக பிரத்தியேகமாக ஒரு வீட்டை வடிவமைத்து கட்டினார். அந்த இடம் அவர் வரைந்த ஓவியங்களைக் காட்சிப்படுத்துகின்ற ஒரு அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் தனித்த தன்மையோடு கட்டப்பட்டதாகும். வாழை இலையை ஒத்தது போல அமைந்துள்ள கூரையைக் கொண்டு இந்தஅருங்காட்சியகம் உள்ளது. அருங்காட்சியகத்தில் அஃபாண்டியின் 250 ஓவியங்கள் காட்சியில் உள்ளன. அதிக காற்று ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை ஆகியன ஓவியங்களின் நிலையைக் குறித்து கவலைகளை உண்டாக்கும் அளவு உள்ளது. அஃபாண்டி அறக்கட்டளை அருங்காட்சியகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது. போதிய நிதி இல்லாமையாலும், வருவாய் இல்லாததாலும் அருங்காட்சியகத்தை நிர்வகிக்க அந்த அறக்கட்டளை சற்று சிரமப்பட்டு வருகிறது கடினம்.[2]

தான் இயற்கை எய்துவதற்கு முன்பாக, அஃபாண்டி தனது சொந்த அருங்காட்சியகத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து, அவரது ஓவியங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்தார். அவர் ஒருமுறை கூறினார், "நான் எளிமையாக இறக்க விரும்புகிறேன். யாருக்கும் தேவையற்ற தொந்தரவு தர நான் விரும்பவில்லை. அப்போதுதான் நான் அமைதியாக இறைவனை சென்று சேரமுடியும்."

பல வகையான நோய்களின் சிக்கலால் பாதிக்கப்பட்ட அஃபாண்டி மே 23, 1990 புதன்கிழமை அன்று இறந்தார். அவர் எப்போதும் தனது குடும்பத்தினரும், தன் படைப்புகளும் தன்னைச் சூழ்ந்து இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். அவருடைய விருப்பத்திற்கேற்ப அவருடைய உடல் அந்த அருங்காட்சியக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நடவடிக்கைகள்[தொகு]

அருங்காட்சியகத்தில் ஸ்டுடியோ தொடர்பான செயன்மைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கஜா வோங் ஸ்டுடியோ குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக ஓவிய வகுப்புகளை நடத்துகிறது.[3] பட்டறைகள் மற்றும் ஓவிய செயல்முறைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கலைப்படைப்பு[தொகு]

அஃபாண்டி தீட்டிய பல ஓவியங்கள் அஃபாண்டி அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன:[4]

  • சுய உருவப்படம், 1938
  • அஃபாண்டி மற்றும் கார்த்திகா (பொட்ரெட் மெட் டோக்டர்), 1939
  • நிர்வாணம் (என் மனைவி மரியாட்டி), 1940
  • தந்தையுடன் கார்த்திகா ஓவியம், 1944
  • வார்ம் உடன் விளையாடும் குழந்தைகள், 1943
  • அவர் வருகிறார், காத்திருக்கிறார் மற்றும் செல்கிறார், 1944
  • ஜகார்த்தாவில் அரிசிக்காக வரிசையில் காத்திருப்பு 1948
  • ஓவியரும் அவருடைய மகளும், 1950
  • டி டெர்ட்ரே என்னும் இடம், 1977
  • சிப்பிங் பைப்பின் சுய உருவப்படம், 1977
  • கரு, 1988

மேற்கண்ட ஓவியங்களுடன் அஃபாண்டி சேகரித்த பிற சக கலைஞர்களான சிந்து சுட்ஜோஜோனோ, பசுகி அப்துல்லா, அம்ரஸ் நடால்ஸ்யா (சிற்பங்கள்), பார்லி, போபோ இஸ்கந்தர், ஹேந்திர குணவன் மற்றும் படாரா லூபிஸ் ஆகியோரின் படைப்புகள் ஆகியோரின் கலைப் படைப்புகளும் சேகரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[5]

காட்சிக்கூடம் 1[தொகு]

காட்சிக்கூட 1இல் அஃபாண்டிக்கு சொந்தமான மதிப்புமிக்க பொருள்களைக் காணமுடியும். அறையின் ஒரு மூலையில், 1976 கோல்ட் காலண்ட் வகையைச் சேர்ந்த கார் உள்ளது. பச்சை நிற மஞ்சள் நிறத்தில் உள்ள அதனை ஒரு மீனை உருவாக்குவதற்காக மாற்றியமைத்துள்ளனர். மேலும் போக்குவரத்திற்காக பயன்படுத்திய பழைய காற்று சுழற்சி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[6]

காட்சிக்கூடம் 2[தொகு]

காட்சிக்கூடம் 2இல் இளைய மற்றும் மூத்த ஓவியர்களின் ஓவியங்களைக் காணலாம்.1988 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட காட்சிக்கூடமானது இரு தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. பல்வேறு கோணங்களில் இந்த ஓவியங்களைக் காண முடியும். முதல் தளத்தில் அப்ஸ்டாக்ட் எனப்படும் சுருக்க பாணியிலான ஓவியங்கள் உள்ளன. இரண்டாவது தளத்தில் யதார்த்தை வெளிப்படுத்துகின்ற பாணியில் உள்ள ஓவியங்கள் உள்ளன.[6]

காட்சிக்கூடம் 3[தொகு]

காட்சிக்கூடம் 3 ஒரு தனித்தன்மை வாய்ந்த கட்டிட அமைப்பில் உள்ளது. இதன் கூரையானது வாழை இலையை ஒத்த வகையில் அமைந்துள்ளது. மூன்று மாடியினைக் கொண்டு அமைந்துள்ள இந்த தளம் உள்ளது. முதல் மாடியில் கஜா வோங் காட்சிக்கூடம் உள்ளது. இது ஒரு காட்சியறையாகவும் உள்ளது. இங்கு குழந்தைகள் தம் ஓவியத் திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இரண்டாவது மாடியில் ஓவியங்கள் மறுசீரமைப்பு அறையாக செயல்பட்டு வருகிறது. நிலத்தடியில் உள்ள தளத்தில் ஓவியச் சேகரிப்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.[6]

குறிப்புகள்[தொகு]

  1. "Numbers of visitor". Affandi Museum. பார்க்கப்பட்ட நாள் April 6, 2018.
  2. Lenzi, Iola (2004). Museums of Southeast Asia. Singapore: Archipelago Press. பக். 200 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:981-4068-96-9. 
  3. "Gajah Wong Studio". பார்க்கப்பட்ட நாள் April 6, 2018.
  4. "Affandi's Paintings". பார்க்கப்பட்ட நாள் April 6, 2018.
  5. "Friends". பார்க்கப்பட்ட நாள் April 6, 2018.
  6. 6.0 6.1 6.2 "MUSEUM AFFANDI - Visit the Palace of the Maestro". www.yogyes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.

வெளி இணைப்புகள்[தொகு]