அஃக் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அஃக் என்பது இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இவ்விதழ் எழுத்தாயுத மாத ஏடு என்ற பிரகடனத்துடன் 1972 சூனில் இருந்து 1978வரை பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்தும் அவ்வப்போதுமாக 20 இதழ்கள்வரை வெளிவந்தது. இந்த இதழ் சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் இதழின் ஆசிரியரான பரந்தாமனால் அரவது வீட்டில் தொடங்கப்பட்டபிருந்தாவனம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. இந்த இதழ் அக்காலகட்டத்தில் நல்லத் தரத்தோடும், வடிவமைப்போடும் வெளிவந்தது.[1] இதனால் அஃக், பதிப்புக்கும் அச்சுக்கும் தேசிய விருதுகள் பெற்றது. [2] இது நவீன இலக்கியத்தின் பதிவை, நுட்பமாகப் படைப்பு வாளெடுத்து புதுமை காட்டி வந்த கலை நுணுக்க படைப்புக்களை வெளியிட்டது. பிரமிளின் 38 கவிதைகளை கண்ணாடியுள்ளிருந்து என்ற தலைப்பிட்டு ஒரே இதழில் கொண்டுவந்தார் பரந்தாமன், இதுவே பிரமிளின் முதல் கவிதைத் தொகுப்பாக் கருதலாம்.[3] இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

  1. http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om153-u8.htm
  2. பரந்தாமன் (2006 செப்டம்பர் 27). "அஃக்". கட்டுரை. http://tamil.koodal.com.+பார்த்த நாள் 27 சூலை 2017.
  3. கலாப்பிரியா (சூலை 2017). "அஃக் பரந்தாமன்: சலிக்காத இலக்கியத் தேனீ". தி இந்து. doi:24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஃக்_(இதழ்)&oldid=2761593" இருந்து மீள்விக்கப்பட்டது