ஃபெல்ட்ஸ்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெல்ட்சுபார்
Feldspar-Group-291254.jpg
தென்கிழக்கு பிராசிலிலிருந்து பெறப்பட்ட (18×21×8.5 செமீ) அளவுள்ளப ெல்ட்சுபார் படிகம் .
பொதுவானாவை
பகுப்பு டெக்டோசிலிகேட்
வேதி வாய்பாடு KAlSi3O8NaAlSi3O8CaAl2Si2O8
இனங்காணல்
நிறம் வெளிர்சிவப்பு, வெள்ளை, சாம்பல், பழுப்பு
படிக அமைப்பு டிரைகிளினிக் அல்லது மோனோகிளினிக்
இரட்டைப் படிகமுறல் டார்ட்டன், கார்ல்சுபத், முதலியன
பிளப்பு இரண்டு அல்லது மூன்று
முறிவு பிளவு தளங்களுக்கு இணையாக
மோவின் அளவுகோல் வலிமை 6
மிளிர்வு கண்ணாடித்தன்மை
கீற்றுவண்ணம் வெள்ளை
ஒளிஊடுருவும் தன்மை ஒளிபுகா
ஒப்படர்த்தி 2.55 - 2.76
இரட்டை ஒளிவிலகல் முதல் நிலை
பலதிசை வண்ணப்படிகமை இல்லை
பிற சிறப்பியல்புகள் படிவுப்பாறை அடுக்கு உறைவு பொது
பெல்ட்சுபார் திட கரைசலில் உள்ள பல்வேறு கனிமங்கள் பங்கெடுக்கும் முகங்களை விவரிக்கும் படம்.

பெல்ட்சுபார்கள் (Feldspars, KAlSi3O8NaAlSi3O8CaAl2Si2O8) என்பன புவியின் மேற்பரப்பில் 60% வரை காணப்படுகின்ற படிக வடிவ சிலிகேட் கனிமப் பாறைகளாகும்.[1]

கற்குழம்பிலிருந்து ஊடுருவும் அல்லது பிதுங்கும் அனற்பாறைகளில் படிகமாக பெல்ட்சுபார்கள் உருவாகின்றன.[2] கால்சிய பிளாசியோகிளேசு பெல்ட்சுபார்களைக் கொண்டு உருவான பாறைகள் அனோர்தோசைட்கள் எனப்படுகின்றன.[3] பலவகைப் படிவுப் பாறைகளில் பெல்ட்சுபார்கள் காணப்படுகின்றன.[4]

இந்தப் பெயர் செருமானிய வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது. செருமானிய மொழியில் ஃபெல்ட் என்பது "நிலம்" என்றும் இசுபத் எனபது " ஒரு தாதுவில்லா பாறை" எனவும் பொருள்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Feldspar. What is Feldspar? Industrial Minerals Association. Retrieved on July 18, 2007.
  2. "Metamorphic Rocks." Metamorphic Rocks Information. Retrieved on July 18, 2007
  3. Blatt, Harvey and Robert J. Tracy, Petrology, Freeman, 2nd ed., 1996, pp. 206–210 ISBN 0-7167-2438-3
  4. "Weathering and Sedimentary Rocks." Geology. Retrieved on July 18, 2007.

மேலும் அறிய[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஃபெல்ட்ஸ்பார்&oldid=1367739" இருந்து மீள்விக்கப்பட்டது