பீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபீனால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபீனால்
Phenol
Phenol2.svg
Phenol-2D-skeletal.png
Phenol-3D-balls.png
Phenol-3D-vdW.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 108-95-2
வே.ந.வி.ப எண் SJ3325000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C6H5OH
மோலார் நிறை 94.11 g/mol
தோற்றம் வெண்மையான திண்மப் படிகம்
அடர்த்தி 1.07 g/cm³
உருகுநிலை

40.5 °C, 314 K, 105 °F

கொதிநிலை

181.7 °C, 455 K, 359 °F

நீரில் கரைதிறன் 8.3 g/100 ml (20 °C)
காடித்தன்மை எண் (pKa) 9.95
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.7 D
தீநிகழ்தகவு
ஈயூ வகைப்பாடு Toxic (T)
Muta. Cat. 3
Corrosive (C)
NFPA 704

NFPA 704.svg

2
3
0
COR
தீப்பற்றும் வெப்பநிலை 79 °C
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் Benzenethiol
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

ஃபீனால் (Phenol) அல்லது கார்பாலிக் காடி (carbolic acid) என்பது நச்சுத்தன்மை உடைய, பார்ப்பதற்கு வெண்மையாக படிக வடிவில் உள்ள திண்மம். இதற்கு கடுமையான ஒரு நெடி ("மணம்") உண்டு (இதனை மருத்துவ மனையில் பெரும்பாலும் உணரலாம்). இதன் வேதியியல் வாய்பாடு C6H5OH என்பதாகும். இவ் வேதிப் பொருளின் கட்டமைப்பு ஃவீனைல் வளையத்துடன் இணைந்த ஒரு ஐதராக்சைல் (-OH) குழுவாகும். இது ஒரு எளிய அரோமாட்டிக் சேர்மம்

ஃபீனால்கள்[தொகு]

ஃபீனால் என்னும் சொல் அறுகோண அரோமாட்டிக் (மணவேதி) கரிம வளையம் ஐதராக்சைல் (-OH) குழுவுடன் இணைந்திருப்பதைக் குறிக்கும். ஃவீனால் என்பது ஃபீனால்கள் என்னும் கரிம வேதிச் சேர்மங்களின் ஒரு வகையைச் சேர்ந்த எளிய ஒரு சேர்மம். ஃவீனால் என்பதன் வேதியியல் பெயர் ஐதராக்சிபென்சீன் (hydroxybenzene). அதாவது அறுகோண பென்சீன் சேர்மத்தின் ஒரு ஐதரசன் இருக்கும் இடத்தில் அதற்கு மாற்றீடாக ஐதராக்சைல் (-OH) குழு அமைந்துள்ளது. எனவே ஐதராக்சி-பென்சீன்.

பண்புகள்[தொகு]

ஃபீனால் நீரில் குறைந்த அளவே கரையக் கூடியது (கரைமை: 8.3 கிராம்/100 மில்லி லிட்டர்). இது சற்றே காடித்தன்மை கொண்டது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனால்&oldid=1745809" இருந்து மீள்விக்கப்பட்டது