ஃபிளைட்ராடார்24
ஃபிளைட்ராடார்24 ( Flightradar24 ) என்பது உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான விமானங்களின் நிகழ்நேரப் பறப்புத் தகவல்களை ஒரு வரைபடத்தில் காட்டும் ஓர் இணைய அடிப்படையிலான சேவையாகும்.[1]. தினமும் 200,000 க்கும் மேற்பட்ட விமானங்களை கண்காணிக்கிறது. இது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகும். இந்தச் சேவை, விமானங்கள் எங்கு பறக்கின்றன, அவற்றின் வேகம், உயரம், புறப்படும் மற்றும் சேரும் இடங்கள், விமான எண், மற்றும் விமானத்தின் வகை போன்ற விவரங்களை வழங்குகிறது. பொதுமக்கள் விமானப் பயணத்தைக் கண்காணிப்பதற்கும், விமானப் போக்குவரத்து குறித்த தகவல்களைப் பெறுவதற்கும் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்:
- விமான எண்கள், புறப்படும் மற்றும் வருகை இடங்கள், விமான வகைகள், நிலைகள், உயரங்கள், திசைகள் மற்றும் வேகங்கள் போன்ற தகவல்களை வழங்குகிறது.
- முந்தைய பறப்புகளின் தடங்களை மீள்பார்வை செய்யும் வசதி உள்ளது.
- விமான நிறுவனங்கள், விமான வகைகள், இடங்கள் அல்லது விமான நிலையங்களின் அடிப்படையில் வரலாற்றுத் தகவல்களை காண முடியும்.
- இது உலகின் மிகப்பெரிய ADS-B (Automatic Dependent Surveillance–Broadcast) நெட்வொர்க்காகும், 40,000-க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட ரிசீவர்கள் மூலம், தினமும் 200,000 க்கும் மேற்பட்ட விமானங்களை கண்காணிக்கிறது.
இது வலைத்தளத்திலும், மொபைல் செயலிகளிலும் கிடைக்கிறது.
தனியுரிமை: பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்காக, சில விமானங்களின் தகவல்கள் மறைக்கப்படுகின்றன. உதாரணமாக, ஜப்பானின் அரசாங்க விமானத்தின் தகவல்கள், 2014-இல் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின் பேரில் மறைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஃபிளைட்ராடார்24". Retrieved 2025-05-26.