ஃபிரிடா காலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபிரிடா காலோ
Frida Kahlo self portrait.jpg
ஃபிரிடா காலோ, முள் கழுத்தணியுடனும், ஹம்மிங் பறவையுடனும் கூடிய தன்னுருவப்படம்", நிக்கொலாஸ் முரே சேமிப்பு, ஹரி ரான்சம் மையம், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம்[1]
தேசியம் மெக்சிக்கர்
கல்வி தானே பயின்றது
அறியப்படுவது ஓவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்

அருங்காட்சியகங்களில்:

அரசியல் இயக்கம் அடிமன வெளிப்பாட்டியம்
புரவலர்(கள்)

மற்றும் நண்பர்கள்:

ஃபிரிடா காலோ (Frida Kahlo - ஜூலை 6, 1907 – ஜூலை 13, 1954) பன்னாட்டுப் புகழ் பெற்ற ஒரு மெக்சிக்கோ நாட்டுப் பெண் ஓவியர் ஆவார். இவர் மெக்சிக்கோவின் உள்நாட்டுப் பண்பாட்டுச் செல்வாக்கையும்; உண்மையியம், குறியீட்டியம், அடிமன வெளிப்பாட்டியம் போன்ற ஐரோப்பியக் கலை இயக்கங்களின் செல்வாக்கையும் கொண்ட ஒரு பாணியில்; உயிர்ப்புள்ள நிறங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்தார். பெரும்பாலான இவரது ஆக்கங்கள், அவருடைய துன்பங்களையும், பெண்ணியத் தன்மையையும் குறியீடாக வெளிப்படுத்தும் தன்னுருவ ஓவியங்கள் (self-portraits) ஆகும்.

1929 ஆம் ஆண்டில் காலோ, சுவர்ச்சிற்பியான டியேகோ ரிவேரா என்பவரை மணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒரே அரசியல் பார்வையைக் கொண்டிருந்ததோடு, ரிவேரா, காலோவின் ஓவிய முயற்சிகளுக்கு உற்சாகமும் கொடுத்து வந்தார். காலோ பல காலமாகவே ஒரு முக்கியமான ஓவியர் என ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தாலும், இவரது ஓவியங்கள் குறித்த பொது விழிப்புணர்வு 1970க்குப் பின்னரே பரவலாக ஏற்பட்டது.

மெக்சிக்கோ நகரத்தின் கோயோவாக்கன் பகுதியில் உள்ள, இவர் வாழ்ந்த "நீல" வீடு இன்று ஒரு அருங்காட்சியகம் ஆகும். இதனை டியேகோ ரிவேரா தான் இறக்கும்போது அன்பளிப்பாகக் கொடுத்தார்.

வாழ்க்கையும் குடும்பமும்[தொகு]

ஃபிரிடா காலோ அவர்கள் 1907 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் ஆறாம் திகதி, கோயோகான் எனும் இடத்தில் உள்ள அவருடைய பெற்றோர்களின் வீடான லா கசா அசுல் (La Casa Azul) எனும் வீட்டில் பிறந்தார். மெக்சிகோ நகரின் புற எல்லையில் இருக்கும் ஒரு சிறிய நகரமே கோயோகான் ஆகும்.

காலோவின் தந்தையான கில்லர்மோ காலோ (Guillermo Kahlo) (1871–1941) 1871 ஆம் ஆண்டில் செருமனி நாட்டில் உள்ள ப்ஃபொர்செஇம் எனும் இடத்தில் (Pforzheim) ஜகொப் ஹெயின்ரிச் காலோ (Jakob Heinrich Kahlo) மற்றும் ஹென்ரிஎட்டே கவுஃப்மான் (Henriette Kaufmann) தம்பதியினருக்கும் மகனாகப் பிறந்தவராவார். காலோவின் வாழ்க்கைக் காலத்தில், அறிக்கைகளின் மூலம் அவருடைய தந்தை ஒரு யூத இனத்தவராக அடையாளங் காணப்பட்டார்.[2][3]. எனினும் மரபுவழி ஆய்வுகள் காலோவின் தந்தை யூத மரபுவழியை சேர்ந்தவரல்லர் என சுட்டிக் காட்டுகின்றன. எனினும் அக்குடும்பம் லூதரனியக் குடும்பம் ஆகும்[4][5]

ஃபிரிடா காலோவின் தந்தை பத்தொன்பது வயதைல் 1891 ஆம் ஆண்டில் மெக்சிகோவிற்குப் பயணித்தார். அத்துடன் அவரின் ஜேர்மானியப் பெயரான வில்ஹெல்ம் என்பதை கில்லர்மோ என மாற்றிக்கொண்டார்.

ஃபிரிடாவின் தாயார் ஸ்பானிஷ் வம்சாவளியையைச் சேர்ந்த அமெரிக்க முதற்குடிமகளான ஒரு பக்திமிக ரோமன் கத்தோலிக்கர் ஆவார்.[6] ஃபிரிடாவின் பெற்றோர்கள் கில்லர்மோவின் முதல் மனைவி இறந்த பின்னர் திருமணம் செய்து கொண்டனர். எனினும் அவர்களுடைய திருமணம் கவலையையே கொடுத்தது. கில்லர்மோ தம்பதியினருக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்தன. அவர்களுள் ஃபிரிடா மூன்றாவது பிள்ளை. அவளுக்கு அதே வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தனர். ஃபிரிடா பெண்களால் சூழப்பட்ட ஒரு உலகத்தில் வாழ்ந்தார். எனினும் அவரது தந்தையின் இணக்கமான விதிமுறைகளுக்கு ஏற்பவே இருந்து வந்தார்.

ஃபிரிடா மூன்று வயதில் இருக்கும் போது மெக்சிகன் புரட்சி 1910 ஆம் ஆண்டில் ஆரம்பமானது ஃபிரிடா பின் வாழ்க்கைக் காலத்தில் 1910 ஆம் ஆண்டிலேயே பிறந்ததாகக் கூறினார்.

ஃபிரிடா காலோ குத்துச்சண்டையிலும் ஏனைய விளையாட்டுக்களிலும் பங்குபற்றியுள்ளார். 1922 ஆம் ஆண்டில் காலோ முதன்மைப் பள்ளியில் சேர்ந்துகொண்டார். அவர் முப்பத்தைந்து பெண் மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் ஒரு கருத்து வேறுபட்ட கட்சியில் சேர்ந்துகொண்டு அவரது திறமையில் மற்றவர்கள் மயங்கிவிடுமளவிற்கு அசத்தினார்.

1927 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதியில் பேருந்து வண்டியுடன் ஒரு தள்ளுவண்டி மோதுண்டு பாரிய விபத்து நடந்தது. அதி படுகாயமடைந்தார். விபத்தின் பின்னர் தனது ஆர்வத்தை வரைதல் மேல் செலுத்தினார். இவர் மெச்சிய ஓவியரான டஜேகொ ரிவெரா (Diego Rivera) என்பவரை மணமுடித்தார். இறுதிய்ல் 1954 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 13 ஆம் திகதியன்று மரணித்தார்.

லா கசா அசுல்[தொகு]

மெக்சிகோ நகரில் கோயோகான் எனும் இடத்தில் உள்ளது இவ்வீடு இதிலேயே ஃபிரிடா காலோவின் பிறப்பும் இறப்பு இடம்பெற்றது. ஃபிரிடாவின் தந்தை கில்லர்மோ இவ்வீட்டை 1097 ஆம் ஆண்டில் தமது குடும்பத்திற்காகக் கட்டுவித்தார். 1937 ஆம் ஆண்டில் லியோன் திரொட்ஸ்கி எனும் அரசியல்வாதி இவ்வீட்டிலேயே தங்கினார்.

மூன்று வருடங்களின் பின் ஃபிரிடா காலோவின் இறப்பின் பின்னர் அவரது கணவனான டஜேகொ ரிவெரா 1957 ஆம் ஆண்டில் இறந்தார். அவர் அதை நன்கொடையாகக் கொடுத்தார். அதன் பின் அது ஒரு அருங்காட்சியகமாகி சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடமாக மாறியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Image—full description and credit: Frida Kahlo, Self-Portrait with Thorn Necklace and Hummingbird, 1940, oil on canvas on Masonite, 24-1/2 x 19 inches, Nikolas Muray Collection, Harry Ransom Center, The University of Texas at Austin, © 2007 Banco de México Diego Rivera & Frida Kahlo Museums Trust, Av. Cinco de Mayo No. 2, Col. Centro, Del. Cuauhtémoc 06059, México, D.F.
  2. "Beyond Mexicanidad: The Other Roots of Frida Kahlo’s Identity By Leslie Camhi. The Forward, September 26, 2003". Forward.com (2003-09-26). பார்த்த நாள் 2012-12-28.
  3. Hayden Herrara, Frida: A Biography of Frida Kahlo, 1983 p5
  4. Ronnen, Meir (2006-04-20). "Frida Kahlo's father wasn't Jewish after all". The Jerusalem Post. http://pqasb.pqarchiver.com/jpost/access/1030489151.html?dids=1030489151:1030489151&FMT=ABS&FMTS=ABS:FT&date=Apr+21%2C+2006&author=MEIR+RONNEN&pub=Jerusalem+Post&desc=Frida+Kahlo's+father+wasn't+Jewish+after+all&pqatl=google. பார்த்த நாள்: 2009-09-02. 
  5. Fridas Vater: Der Fotograf Guillermo Kahlo by Gaby Franger and Rainer Huhle
  6. "Frida Kahlo (1907–1954), Mexican Painter". Biography. பார்த்த நாள் 2013-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரிடா_காலோ&oldid=2210986" இருந்து மீள்விக்கப்பட்டது